அதிக லைக்குகளை குவிக்கும் மோடி!
பேஸ்புக் வலைதளத்தில் உலகில் அதிக லைக்குகளை அள்ளும் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 2வது இடம் பிடித்துள்ளார்.
மோடி பேஸ்புக்கில் பதிவிட்ட படங்களான முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய படத்திற்கு 17 லட்சம் லைக்குகளும் பிரதமர் இல்லத்தில் தனது தாயாருடன் மோடி எடுத்த படத்துக்கு 16 லட்சம் லைக்குகளும், கிடைத்துள்ளது.
மேலும் சராசரியாக ஒரு நாளைக்கு 2.89 போஸ்ட்களை பேஸ்புக்கில் மோடி பதிவிடுவதாகவும் அவரது பதிவுகளுக்கு இதுவரை 17.94 கோடி லைக்குகள் கிடைத்துள்ளது.
அத்துடன் மத்திய அரசின் மேக் இந்தியா திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம், ஸ்கில் இந்தியா திட்டங்களுக்கு பேஸ்புக்கில் அதிக வரவேற்பு உள்ளது என சமூக தளமான ஜெயிண்ட் அறிவித்துள்ளது.
அதிக லைக்குகளை அள்ளும் டாப்-3 தலைவர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முதலிடம் பிடித்துள்ளார்.
துருக்கி ஜனாதிபதி ரெசிப் தாயிப் எர்டோகனுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.
அதிக லைக்குகளை குவிக்கும் மோடி!
Reviewed by Author
on
May 27, 2016
Rating:

No comments:
Post a Comment