ஐ.பி.எல்.தொடர்: கிண்ணத்தை வெல்லவிருக்கும் புது அணி எது?
நடப்பு ஆண்டின் ஐ.பி.எல் தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையவிருக்கிறது. காரணம் இந்த முறை ஒரு புது அணி கிண்ணத்தை வெல்ல இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியுடன் வெளியேறிவிட்டதால் கிண்ணத்தை வெல்லும் புதிய அணிக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
தற்போது 9வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. 2வது தகுதிபெறும் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெளியேற்றியுள்ளது.
இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெள்ளிக்கிழமை நடைபெறும் எலிமினேட்டர் ரவுண்டில் குஜராத் லயன்ஸ் அணியோடு மோத உள்ளது.
இதில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியோடு மோத வேண்டும்.
பெங்களூர், குஜராத், ஐதராபாத் ஆகிய மூன்று அணிகளுமே இதுவரை ஐபிஎல் கிண்ணத்தை வென்றது கிடையாது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் இதில் எந்த அணி வென்று சாம்பியன் ஆனாலும், அது ஐபிஎல் தொடரில் ஒரு புது சாதனைதான்.
ஏனெனில் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போதிலிருந்தே ஆடிவரும் பெங்களூர் அணியும், 2013 ஆம் ஆண்டு களத்தில் சேர்க்கப்பட்ட சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் கிண்ணத்தை வென்றதே இல்லை. குஜராத் அணி இவ்வாண்டுதான் உருவாக்கப்பட்டது.
சன்ரைசர்ஸ் அணி முன்னர் டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் இயங்கியபோது கடந்த 2009 ஆம் ஆண்டு கிண்ணத்தை வென்றுள்ளது. எனவே 3ல் எந்த அணி வென்றாலும் ஐபிஎல் தொடரில் ஒரு புது சாம்பியன் கிடைக்கப்போகிறது. அந்த புது சாம்பியன் யார் என்பதை அறிய, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஐ.பி.எல்.தொடர்: கிண்ணத்தை வெல்லவிருக்கும் புது அணி எது?
Reviewed by Author
on
May 27, 2016
Rating:

No comments:
Post a Comment