மரண தண்டனை நிறைவேற்ற மருத்துவ பொருட்களுக்கு தடை விதித்த நிறுவனம்!
மருத்துவப்பொருட்களை தயாரிக்கும் அமெரிக்காவின் பிரபல நிறுவனம் ஒன்று மரண தண்டனை நிறிவேற்ற தங்களது பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல மருத்துவ பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான Pfizer தங்களது பொருட்களை மரண தண்டனை நிறைவேற்ற பயன்படுத்த தடை விதித்து அறிவித்துள்ளது.
குறிப்பாக நச்சு ஊசியால் வழங்கப்படும் மரண தண்டனைக்கு தங்களது பொருட்களை பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேலும் விரிவான நடைமுறை சாத்தியத்தை ஆராய்ந்து வருவதாகவும் அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற விவகாரங்களுக்காக மருத்துவ பொருட்களை விநியோகிப்பதை நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இதுவரை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள 20 பெரும் நிறுவங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளது மட்டுமின்றி, தங்களது மருத்துவ பொருட்களின் விநியோகத்தையும் நிறுத்தியுள்ளனர்.
மேலும் இதுபோன்ற மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட உயிர்கொல்லும் மருந்துகளின் தயாரிப்புகளை படிப்படியாக குறைக்கவும், விற்பனையை மட்டுப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக Pancuronium bromide, potassium chloride,idazolam, hydromorphone, rocuronium, vecuronium ஆகிய 7 பொருட்களும் அந்த பட்டியலில்சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் குறிப்பிட்ட இந்த 7 மருந்துகளில் சில அதிகமாக பயன்படுத்தியதாலேயே பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண தண்டனை நிறைவேற்ற மருத்துவ பொருட்களுக்கு தடை விதித்த நிறுவனம்!
Reviewed by Author
on
May 15, 2016
Rating:

No comments:
Post a Comment