அண்மைய செய்திகள்

recent
-

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபர் அவர்களிடம்……….படங்கள் இணைப்பு


மன்னார் மண்ணின் பெருமை பேசுகின்ற பாடசாலைகளில் மன் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியும் ஒன்று மன்னார் நகரப்பகுதிக்குள் நான்கு தேசிய பாடசாலைகள் அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது தான் மன்னார் மண்ணின் பெயரை நிலைநாட்டியதில் இந்த நான்கு பாடசாலைகளோடு மன்னார் மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளும் ஒன்றுக்கொன்று சரிநிகரே…!!!

மன்னார் மண்ணின் உதைபந்தாட்டம் எனவரும் போது மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை முதன்மையானது….
1870ம் ஆண்டு நல்லாயன் பாடசாலையாக இருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று பல ஆசிரியர்களின் அதிபர்களின் தியாக சிந்தையாலும் திறமையான கடும் உழைப்பாலும் கடும் சவாலையும் எதிர்கொண்டு பழையமாணவர்களின் நலன்விரும்பிகளினதும் மக்களின் இடைவிடாத ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் இன்று பெரும் விருட்சமாக காட்சியளிக்கின்றது. மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை என்றால் அது மிகையல்ல…

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி கல்வி விளையாட்டு கலாச்சாரம் தமிழ் ஆங்கிலம் ஏனைய எல்லாப்போட்டிகளிலும் பங்கு பற்றி முதல் இடத்தினை மாவட்டம் மாகாணம் தேசியம் சர்வதேசம் என தமது பெயரை நிலைநாட்டி மன்னார் மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்தவர்கள் பலர் சாதனைகள் இங்கே குறிப்பிட முடியாது பல பக்கங்கள் எழுதவேண்டியிருக்கும் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விடையமே….!!!
இக்கல்லூரியில் இருந்து கற்று வெளியேறிய பலர் பாரில் பல பெரிய பொறுப்புகளில் பதவிகளை அலங்கரிக்கின்றார்கள் அதிலும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளின் அதிபர்களாகவும் தலைமைஆசிரியர்களாகவும் இருப்பவர்கள் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள் இதுவே எமது கல்லூரியின் சிறப்பாகும்.

இவ்வாறான பல சிறப்பிற்கு சொந்தம் கொண்ட பெருமைப்பட்ட எமது பாடசாலையானது சமீபகாலமாக ஒழுக்கவிழுமியம் கல்வி கலை விளையாட்டு ஏனைய துறைகளில் பிரகாசிக்க தவறியுள்ளது கவலைக்கிடமான விடையம் தான் பலர் பலவகையான காரணங்களை முன்வைத்தாலும்  சில காரணங்கள் உண்மைதான்.

 தற்போதைய மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் போட்டித்தன்மை விவேகம் இல்லை எனது பாடசாலை நாம் முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை.... கற்பித்தால் சரியென்று ஆசிரியர்களும் ஏதோ கற்கிறோம் என்று மாணவர்களும் அதாவது பரீட்சையில் O/L- 10A  A/L-4A எடுக்க வேண்டும் என்று நினைப்பதில்லை 3சி-3எஸ் எடுத்தால் போதும் என்று நினைக்கும் போது எப்படி முதல் இடத்தினை பெறும் அத்தோடு ஒழுக்கம் என்பதும் மோசமான நிலையில் உள்ளது. எமது பாடசாலை தற்போது எமக்கு புதிதாக வந்திருக்கும் அதிபர் மூலம் மீண்டும் எமது பாடசாலை எல்லாத்துறைகளிலும் கொடிகட்டிப்பறக்கும் என்பதில் ஐயமில்லை…

காரணம் நானாட்டானின் மைந்தனான அருட்சகோதரர் சந்தியாப்பிள்ளை இம்மானுவேல் றெயினோல்ட் எல்லோராலும் மணி பிறதர் என அன்பாக அழைக்கப்படுகின்ற
    யாழ் பல்கலைக்கழகத்தின்
B.A(hons)புவியியல் சிறப்புப்பட்டதாரி  
ME.Dip.in.Education பட்டப்பின் கல்வி டிப்ளோமா
    யாழ் பல்கலைக்கழகத்தின்
M.ed கல்வி முதுமாணி (ஆங்கில மொழி மூலம்) 
SLPS-2-இலங்கை அதிபர் சேவைகள் தரம்---02 திறமையோடும் கல்வித்தகுதியோடும்
இதுவரை கடமையாற்றிய பாடசாலைகளாக
    மன்-புனித ஆனாள்.ம.மவி---2003
    மன்-அடம்பன் ம.ம.வி---2004-2007
    மன்-நானாட்டான்.ம.மவி---2009-28-02-2016
 மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை 29-02-2016.....

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை கடந்த காலங்களில் அதிபராகவும் பிரதி அதிபராகவும் கடமையாற்றியுள்ளதோடு மீண்டும் வைபவரீதியாக 29-02-2016 அருட்சகோதரர் ரெஜினோல்ட் அவர்கள் கடமைப்பொறுப்பினை ஏற்று  மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு  சேவையாற்ற வந்திருப்பது காலம் கனிந்து சாலச்சிறந்த விடையமாகும்.

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை பொறுத்தமட்டில் எல்லா வளங்களும் உள்ளது. அத்தனை வளங்களையும் சரியாகவும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் சிறந்த ஆளுமையுடனும் நிர்வகித்தால் இணைந்து செயற்பட்டால் பாரிய திருப்பத்தை ஏற்படுத்த முடியும்.
மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் பழையமாணவர்களிடமும் வினாக்கொத்தினை வழங்கியுள்ளார் அதில் பாடசாலை வளர்ச்சிப்படியானது எப்படி அமையவேண்டும் என்ற கேள்வியைத்தொடுத்திருப்பதே நல்ல வளர்ச்சியின் ஆரம்பப்படியாகும்.

புனித/சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் 08.05.2016 அன்று காலை 10.00 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் பாடசாலை அதிபர் அருட்.சகோ.S.E.றெஜினோல்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வின் போது கடந்த கால கூட்டறிக்கை சங்க செயற்பாட்டறிக்கை மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட நிதி அறிக்கை(1.1.2013-30.4.2016) என்பவை வாசிக்கப்பட்டது. அத்துடன் இவ் நிகழ்வில் நடப்பாண்டிற்கான(2016) புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன் பழைய நிர்வாக உறுப்பினர்களின் சேவைக்கு கல்லூரி சமூகம் மற்றும் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.


புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் விபரம்.

தலைவர்:- அருட்.சகோ.S.E.றெஜினோல்ட்
உப தலைவர்:- அருட்.தந்தை.A.Jமுரளி

செயலாளர்:- திரு.S.டீன்சன்.
உப செயலாளர்:- திரு.G.J.ராகவராஜ்

பொருளாளர்:- திரு.F.R.மனோகாந்
உப பொருளாளர்:- திரு.J.கிங்ஸ்லிதாசன்

நிர்வாக உறுப்பினர்கள்
1.
திரு.R.V.அன்ரனி தாஸ் பெனாண்டோ
2.
திரு.S.அனுராஜன்
3.
திரு.S.மைக்கல் கொலின்
4.Rev.Fr.P.
நேரு குரூஸ்
5.Rev.Bro.
ஜோகன்
6.
திரு.V.A.வசந்தகுமார் பெனாண்டோ
7.
திரு.A.ஞானமணி
8.
திரு.M.M.ராஜ்குமார்
9.
திரு.S.தயாளன்
10.
திரு.A.ரொபேட் பீரிஸ்
11.
திரு.S.யூட் பிரதீபன்
12.
திரு.M.அன்ரனிஸ்

நல்ல ஆரோக்கியமான அமைப்பாக அமைந்துள்ளதோடு அதிபர் அவர்களின் கூற்று என்னை எவ்வளவிற்கு பயன்படுத்த முடியுமோ அவ்வளவிற்கு பயன்படுத்தலாம் என்னை இக்கல்லூரிக்கு அர்பணித்துள்ளேன் என்பது வெள்ளி வானத்தில் தெரிவது போல மீண்டும் எமது கல்லூரியானது விளையாட்டிலும் கல்வியிலும் உச்சத்தினை தொடும் அதேவேளை மாணவர்களின் ஒழுக்கம் என்பது தற்போது பூச்சியமாக உள்ளது உண்ணமயிலும் உண்மை கல்வி விளையாட்டு ஒழுக்க விழுமியத்தோடும் மீண்டெழுவார்கள் எனில் சூரியக்கதிர்கள் கண்டு பணித்துளி மறைவது போல எமது கல்லூரியில் படிந்திருக்கும் தூசியை துடைத்து. புதிய ராஜ்ஜியம் அமைப்போம். வெறுமனே அதிபரை மட்டும் பொறுப்புக்கொடுக்காமல் சொல்லிக்கொண்டிராமல் மாணவர்கள் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் கல்விச்சமூகம் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஓரணியில் சேர்ந்து கொண்டால் எமது கல்லூரி பட்டொளி வீசும்..... பார்முழுதும் பேசும்..... உண்மையான விசுவாசம் உறுதியான நேசம்கொண்டு கல்லூரியில் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் மூச்சாய் இருப்போம்…

செயலாற்ற இணைவோம்
செங்கம்பளவரவேற்புடன் செங்கோள் எடுப்போம்…


பழையமாணவன்
இளங்கவிஞன்
ஊடகவியலாளன்
-வை.கஜேந்திரன்-
























மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபர் அவர்களிடம்……….படங்கள் இணைப்பு Reviewed by Author on May 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.