அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகர சபையின் நகரபிதா எஸ்.ஞானப்பிரகாசம் மாரடைப்பால் மரணம்.....இதய அஞ்சலிகள்.



மன்னார் பனங்கட்டுக்கொட்டு சொந்த இடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை ரெட்ணம் லூசியா நல்லம்மா அவர்களுக்கு 1949-05-19 பிறந்த சந்தான்பிள்ளை ஞானப்பிரகாசம்  மன்னார் நகர சபையின் முன்னாள்  நகரபிதா எஸ்.ஞானப்பிரகாசம்(வயது-67) திடீர் மாரடைப்பின் காரணமாக இன்று (15-05-2016) ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பொது வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

திடீர் சுகயீனம் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலை 4.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் சார்பாக மன்னார் நகர சபைத்தேர்தலில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளைப்பெற்று மன்னார் நகரசபையின் நகரபிதாவாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நகரசபையின் முன்னை நாள் தலைவரும்,தமிழ் தேசிய உணர்வாளருமான சந்தான்பிள்ளை ஞானப்பிரகாசம்(அருமை அண்ணன்)அவர்கள்  இறைபதம் அடைந்த செய்தி அதிர்ச்சியும்,பேரிழப்புமாகும்.எமது கண்ணீர் அஞ்சலிகளை செலுத்தி,அருமை அண்ணனின் குடும்பத்தின் ஆழ்ந்த துயரத்தில் மன்னார் இணையகுழுமமாகிய நாமும் இணைந்து கொள்கின்றோம்.






மன்னார் நகர சபையின் நகரபிதா எஸ்.ஞானப்பிரகாசம் மாரடைப்பால் மரணம்.....இதய அஞ்சலிகள். Reviewed by Author on May 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.