அண்மைய செய்திகள்

recent
-

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டு எழுச்சி அரங்கு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !


தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியற்பெருவிருப்பினை முரசறைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டு எழுச்சி அரங்கு அமெரிக்காவில் இடம்பெறவிருக்கின்றது.

வட்டுக்கோட்டைத்தீர்மானம் முரசறையப்பட்டிருந்த மே14ம் நாளில் (14-05-2016) இடம்பெறவிருக்கின்ற இந்த எழுச்சி அரங்கினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

கொசவோ, கிழக்கு தீமோர், தென்சுடான், கனடா, ஐக்கிய இராச்சியம், நோர்வே, இந்தியா என பன்னாட்டு அரசியல் மற்றும் வளஅறிஞர்கள் பலர் பங்கெடுக்கின்றனர்.

வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அதன் அரசியற் பரிமாணமும், பொதுசன வாக்கெடுப்புக்கான செயலியக்கம், மென்நிகர் தமிழீழ அரசுக்கான யாப்பு வரைதல் ஆகிய முக்கிய விடயங்களை மையப்படுத்தி இந்த எழுச்சி அரங்கு இடம்பெறவிருக்கின்றது.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 முதல் 2016 வரையிலான ஈழவிடுதலைப் போராட்டத்தின் வழித்தடங்களை பேசுபொருளாக கொண்ட உயிர்ப்பு….எனும் இசைத்தட்டு, வட்டுக்கோட்டைத் தீர்தமானத்தினை மையப்படுத்திய வரலாற்று ஆவணம் ஆகியன இந்நிகழ்வில் வெளியிடப்படவிருக்கின்றது.

மே 14ம் நாள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குறித்த Millennium UN Plaza,1 UN Plaza,New York, NY 10017இந்த முகவரியில் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டு எழுச்சி அரங்கு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ! Reviewed by NEWMANNAR on May 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.