கிளிநொச்சி மாணவர்களால் பெருமையடைந்த வலயக் கல்விப்பணிப்பாளர்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கிளிநொச்சி மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் பண்புகள் மிக்க நடவடிக்கைகள் பெருமையாக பேசப்பட்டமையினால், கிளிநொச்சியின் கல்விப் பணிப்பாளர் என்ற வகையில் அந்தக் கூட்டத்தில் தான் மிகவும் பெருமையடைந்ததாக வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கும், இந்துக் கல்லூரிக்கும் இடையே இடம்பெற்ற நீலங்களின் சமர் துடுப்பாட்ட போட்டியில் பிரதம அதீதியாக கலந்துகொண்டுஉரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும்குறிப்பிடுகையில்>
இன்று யாழ்ப்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியன் உள்ளிட்ட சில நீதிபதிகள் நடத்திய கூட்டம் ஒன்றில் மாணவர்களின் தற்போதைய நடவடிக்கைகள் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டது.
இதன் போது கிளிநொச்சி மாணவர்கள் பற்றியும் பேசப்பட்டது. இது அந்தக் கூட்டத்தில் என்னைப் பெருமைப்படுத்தியது எனக் குறிப்பிட்ட அவர்,
இந்த துடுப்பாட்ட போட்டியிலும் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்ட மாணவர்கள் என அனைவரும் போட்டி முடியும் வரைக்கும் நடந்துகொண்டவிதம், கடைபிடித்த கட்டுப்பாடுகள் பண்புகள் என்பன கிளிநொச்சி மாணவர்கள்ஒழுக்கமிக்கவர்கள் என்பதனை மேலும் உறுதிப்படுத்தியது.
அதற்காக நான் உங்களை பாராட்டுகிறேன். தொடர்ந்தும் ஒழுக்கமிக்க செயற்பாடுகள் தொடரவேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
கிளிநொச்சி மாணவர்களால் பெருமையடைந்த வலயக் கல்விப்பணிப்பாளர்!
Reviewed by Author
on
May 15, 2016
Rating:

No comments:
Post a Comment