மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் மாற்றாற்றல் கொண்டவர்ளுக்கு இடம் பெற்ற மருத்துவ முகாம்.
மூளை முடக்குவாதம் சார்ந்த பாதிப்புக்களையுடைய சிறுவர்கள்,கல்வி கற்பதற்கும் ,அன்றாட செயற்பாடுகளை செய்வதற்கும், இயன் பயிற்சிகள் மற்றும் உதவித்திட்டங்களைப் பெறுவதற்கும் மருத்துவச்சான்றிதழ் இல்லாமையினால்; பெரும் சிரமத்தினை எதிர் நோக்குகின்றனர்.
அத்துடன்; இச்சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் வலுவிழப்பு முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு,அடையாளம் காண முடியாமலும், முறையான மருத்துவ அத்தாட்சிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியாமலும்,பொருத்தமான சக்கர நாற்காலி மற்றும் ஆதார உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் அவர்களது பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியமையால் அக்குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன,;மன்னார் மாவட்டத்தில,; மன்னார் நகரபிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட மூளை முடக்குவாதம் மற்றும் அவை சார்ந்த பாதிப்புக்களையுடைய 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கான மருத்துவ முகாம்,மன்னார் சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையில் நேற்று முந்தினம் சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் நடைபெற்றது.
குறித்த மருத்துவ முகாமில் 34 பிள்ளைகள் பங்கு பற்றியதோடு 34 பிள்ளைகளுக்கும் மருத்துவச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
12 பிள்ளைகளுக்கு இயன் பயிற்சி வழங்கப்பட்டது. 07 பிள்ளைகளுக்கு பொருத்தமான சக்கர நாற்காலிகள் மற்றும் ஆதார உபகரணங்கள் வழங்குவதற்கானஅளவுத்திட்டங்கள் எடுக்கப்பட்டு உரியகாலத்தில் இவற்றை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவசரமாகத் தேவைப்பட்ட பிள்ளைக்கு பொருத்தமான சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
இம்மருத்துவ முகாமானது'இலங்கையின் வடபகுதியில் மூளை முடக்குவாதம் மற்றும் அது சார்ந்த பாதிப்புக்களையுடைய சிறுவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல்';;என்னும் திட்டத்தின் கீழான ஓரு நிகழ்ச்சித்திட்டமாகும்.
ஜேர்மனிய அரசாங்கத்தின் பொருளாதார அமைச்சின் நிதி அனுசரணையுடன்,பல்வேறு அமைப்புக்களின் தாழில் நுற்ப உதவியுடன் குறித்த மருத்துவ முகாம் சிறப்பாக நடை பெற்றது.
-மன்னார் நிருபர்-
(30-05-2016)

Reviewed by NEWMANNAR
on
May 30, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 30, 2016
Rating:

No comments:
Post a Comment