நிவாரணங்கள் தாமதமானால் 117 இலக்கத்திற்கு அழைக்கவும்
கொஸ்கம-சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் நிர்க்கதிக்குள்ளானபொதுமக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வரும் நிவாரணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுமாயின் 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.
இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவத்தினால் தற்காலிக முகாம்களில் இருந்து தத்தமது இல்லங்களுக்கு செல்வோருக்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வழங்கப்பட்டு வரும் நிவாரணப் பொருட்கள் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்படுமாயின் உடடினயாக 117 என்ற எண்ணுக்கு அழைத்து தெரிவிக்குமாறு அவர்பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
நிவாரணங்கள் தாமதமானால் 117 இலக்கத்திற்கு அழைக்கவும்
Reviewed by Author
on
June 10, 2016
Rating:

No comments:
Post a Comment