அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் WUSC நிறுவனத்தினரால் தகவல் தொழிநுட்பம் தொடர்பான கருத்தமர்வு....படங்கள் இணைப்பு


 மன்னார் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனனும் WUSC நிறுவனமும் இணைந்து 09-06-2016 இன்று காலை 11 மணியளவில் ஆகாஸ் கொட்டலில் தகவல் தொழிநுட்பம் தொடர்பான கருத்தமர்வு இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் 25வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வரும்  WUSC நிறுவனம் ஆனது தனது சேவையின் அடுத்த நகர்வாக மன்னார் இளைஞர் யுவதிகளுக்கான துறைசார்ந்த பயிற்சி வழங்கி  வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் விதமாக பின்வரும்.......
  • சுற்றுலாத்துறை    -Hospitality & Tourism
  • கட்டுமானத்துறை-  Construction
  • மோட்டர் வாகனத்துறை   Automotive-
  • தகவல்தொழிநுட்பத்துறை-   ICT
நான்கு துறைகளிளும் துறைசார்ந்த பயிற்சி வழங்கி வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் ASSET  செயற்றிட்டம் 5வருட 2015--2019 வரை  செயற்படவுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே இன்று தகவல்தொழிநுட்பத்துறை கருத்தமர்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த WUSC நிறுவனத்தின் முகாமையாளர்கள்......
Timothy Edward ,
Densil Fernando,
Sanath Manage

அவர்களுடன் பிராந்திய முகாமையாளர் சிவானந்தன் மன்னார் மாவட்டத்தின் சீரேஸ்ர நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர்களான செந்தூரன் மற்றும் தர்சினி அவர்களுடன் தகவல்தொழிநுட்பத்துறை சார்ந்வர்களுடன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.











மன்னார் மாவட்டத்தில் WUSC நிறுவனத்தினரால் தகவல் தொழிநுட்பம் தொடர்பான கருத்தமர்வு....படங்கள் இணைப்பு Reviewed by Author on June 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.