அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு,கிழக்கில் உள்ள அனைத்து நிலங்களையும் விடுவிக்க முடியாது!- பாதுகாப்பு செயலாளர்.....


பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிலங்களையும்விடுவிக்க முடியாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சிதெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுவிப்பதற்கான பொருத்தமான இடங்களை தற்சமயம் அடையாளங்கண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின கீழ் இருந்த இடங்களை பொதுமக்களிடம்வழங்கும் வைபவத்தில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று பேசாலை மற்றும் வலிகாமம் பகுதிகளில் 201 ஏக்கர் நிலங்களானதுவிடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் போலவே எதிர்வரும் சில நாட்களுக்குள் இவ்வாறு பல இடங்கள்விடுவிக்கப்படவுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

மேலும் பாதுகாப்பு நிமித்தம் விடுவிக்கப்பட முடியாத நிலங்கள் குறித்துதெரிவிக்கப்பட முடியாமல் உள்ளதாகவும், தெரிவித்த அவர் குறித்த விடுவிக்கப்படமுடியாத நிலங்களின் உரிமையாளர்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கானநடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் 29,000 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினர் வசம்இருந்ததாகவும்,அதில் அதிகளவான நிலங்கள் பொதுமக்களிடம்கையளிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராய்ச்சிகுறிப்பிட்டுள்ளார்.

வடக்கு,கிழக்கில் உள்ள அனைத்து நிலங்களையும் விடுவிக்க முடியாது!- பாதுகாப்பு செயலாளர்..... Reviewed by Author on June 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.