அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு மாறாது! உலக தமிழர் பேரவை


அமெரிக்கா அனுசரணையில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான யோசனையை இலங்கை அரசாங்கம் மாற்ற முடியாது என்று உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளதாக உள்ளுர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட இந்த யோசனையில் இலங்கை அரசாங்கம் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பது தொடர்பில் ஆங்கில செய்தித்தாள் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனிடம் வினவியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள அவர், அமெரிக்கா தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை குறிப்பிட்ட யோசனையில் இறுதியாக ஏற்படுத்தியுள்ள போர்க்குற்ற விசாரணையில் உள்நாட்டு நீதிபதிகள் மாத்திரமே இடம்பெறுவர் என்ற மாற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா மென்மைப்போக்கை கடைப்பிடிக்குமா? என்று ஆங்கில இதழ் அவரிடம் கேட்டுள்ளது

இதற்கு பதிலளித்துள்ள அவர், ஜனவரி 2016ல், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் தூதுவர் கீத் ஹாப்பர், இலங்கை தொடர்பிலான தீர்மானத்தில் அமெரிக்கா எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது சர்வதேசத்துடன் இணைந்த வேலைத்திட்டம் என்றும் சுரேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் இலங்கை விடயத்தில் பொறுக்கூறல் இடம்பெறாதவரையில் நல்லிணக்கத்துக்கு வாய்ப்பில்லை என்றும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு மாறாது! உலக தமிழர் பேரவை Reviewed by Author on June 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.