அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (15-07-2016) கேள்வி பதில்

கேள்வி:! -
      என் அன்பிற்குரிய வழக்கறிஞர் சுதன் அண்ணா நான் சிலாபத்திலிருந்து நந்தினி.அண்ணா மன நலம் என்றால் என்ன எதனால் மன நலம் பாகிக்கப்படுகிறது என்பதனை தெளிவு படுத்துங்கள்.

பதில்: -அன்பான சகோதரியே மனநலம் தொடர்பான பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளேன்.அதனை எனது முகநூலில் சென்று பார்வையிடும் போது மேலதிக விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.இருப்பினும் தங்களுக்கும் பதிலளிப்பது எனது கடைமை!. சமூகத்தில் வாழும் ஒருவர் தனது பலங்களையும் பலவீனங்களையும் இனங்கண்டு வாழ்க்கையில் வரக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களையும் அறிந்து தனக்கும் தன்னைச்சார்ந்திருப்பவர்களுக்கும் எவ்விதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படாதவாறு தனது வாழ்க்கைக்கான முடிவுகளை தானே பெற்று முழுமையான மன ஆரோக்கியத்துடன் வாழ்வதே மனநலமாகும். ஒருவனுடைய நல்வாழ்விற்கான அத்திவாரமாகக்கருதப்படுவதே மன நலமாகும். அவனது வீடும் நாடும் பயன்மிக்கதாக செயற்படுவதற்கும் அதுவே வழிவகுக்கிறது. ஒருவனது உடல், உள்ளம், சமூகம், சூழல், ஆன்மீகம் போன்ற அனைத்திலும் சமநிலை பேண உதவுவதும் மனநலமேயாகும்.
மனநலம் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்கள்
மனநலப்பாதிப்பு ஒருவருக்கு வயது வித்தியாசமின்றி எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்படலாம்.
சிறு வயதிலிருந்து வயோதிபம் வரைக்குமுள்ள ஒவ்வொரு பருவங்களிலும் ஒருவன் உளப்பாதிப்பிற்கு உற்படுவான்.
உதாரணமாக,
• சிறு வயதில் பெற்றோரின் அன்பு அரவணைப்பு கிடைக்காமை
• வீட்டில் ஏற்படும் சண்டை சச்சரவுகள்
• அளவுக்கு அதிகமாக வற்புறுத்துதல்
• தனக்கு வேறுபாடு காட்டுதல் என்ற உணர்வு
• தொடர்ந்து உடல் நோய்களுக்கு உட்படுதல்
• உடற் குறைபாடுகள்
• வீட்டிலும் மற்றவர்களாலும் விமர்சிக்கப்படுதல்
• கணவனால் மனைவிற்கும் மனைவியால் கணவனுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள்
• பொருளாதாரப்பிரச்சினைகள்
• சூழல் மாற்றம்
• பிரிவு
• விவாகரத்து
• மாணவர்களாயின் பாடசாலையில் நண்பர்களால் ஏற்படும் பிரச்சினைகள்
• படிக்க முடியாமை அல்லது படிப்பு வராமை
• சரியான தொழிலை தெரிவு செய்யாமை
• புகைப்பிடித்தல், போதைப்பொருள் பாவனை
• திருமணம் தாமதமாதல்
• பொருந்தாத திருமணங்கள்
• திருமணம் செய்ய வசதியின்மை
• குழந்தையின்மை
• பெற்றோரை குழந்தைகள் மதிக்காமை, கவனிக்காமை
போன்ற மேலும் பல காரணங்களினால் ஒருவரது மனநலம் பாதிக்கப்படலாம்
இன்றைய (15-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.