அண்மைய செய்திகள்

recent
-

15 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலைப் புலிகளின் வழக்கு விசாரணைக்கு!


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் நாளை வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

கடந்த 2001ஆம் ஆண்டு ஜூலை மதம் 24ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இந்த தாக்குதலின் காரணமாக 7 விமானப்படை வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட அதேவேளை, 14 படை வீரர்கள் காயமடைந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு கிபிர் விமானங்கள், ஒரு மிக் ரக விமானம், இரண்டு M1-17 , மூன்று K-8 விமானம் உள்ளிட்டவைகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனபாலசிங்கம் ஜெயலக்ஷ்மி, இரத்தினசிங்க புஷ்பகுமரன் அல்லது பொன்னுத்துரை, விக்டர் அல்பிறட் டொமினிக், நாகேந்திரம் நாகரத்தினம், நிர்மலா ரஞ்சன் அல்லது மசூர், சுப்பிரமணியம் நவராஜசிங்கம் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் அனைவருக்கும் எதிராக சுமார் 311 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் 415 பேர் சாட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலைப் புலிகளின் வழக்கு விசாரணைக்கு! Reviewed by Author on July 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.