இன்றைய (23-07-2016) கேள்வி பதில்
கேள்வி:−மதிப்பிற்குரிய சட்டத்தரணி சுதன் sir.என் பெயர் வரலஷ்மி! நான் மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடன கல்லூரியில் படிக்கிறேன்.sir புகை பிடிப்பது பிடிப்பவர்களுக்கு மட்டுமன்றி அதனை சுவாசிப்பவர்களுக்கும் கேடுதானே?
பதில்:− அன்பான மாணவியே! புகை பிடிப்பது மரணத்தை நம் வீட்டின் அடி வாசலுக்கு அழைப்புவிடுக்கும் செயலாகும்.புகை பிடிக்கும் பழக்கமானது புகைப்பவனை மட்டுமல்லாது அவனைச் சூழ்ந்து இருப்பவரையும் பாதிக்கிறது.உறிஞ்சப்படும் புகை புகைப்பவனின் இருதயம்,சுவாசப்பை மற்றும் மூளை போன்ற அங்கங்களை பாதிக்கிறது.
ஒரு வெண்சுருட்டில் அடங்கியுள்ள தார், நிக்கட்டின், மற்றும் பல இரசாயன பொருட்களின் கலவை புற்று நோய், டீபி, மூளையில் இரத்தம் கசியச் செய்தல் என பல நோய்களை உண்டாக்கின்றன.
உறிஞ்சப்படும் புகையில் 4000 இரசாயனப் பொருட்களும் அவற்றுள் 200 விஷ இரசாயனங்களும் உள்ளன.மேலும் 43 வகை இரசாயனங்கள் புற்றுநோயை உண்டு பண்ணுபவை.வெளியேற்றப்பட்ட சிகரட்டு புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்க வாத நோய் ஏற்பட சாத்தியங்கள் அதிகம்.பக்கவாத நோய் ஒருவரின் பார்வையிழக்கச் செய்யலாம், உடல் உறுப்புகளின் செயல்பாட்டை பாதிப்படையச் செய்யலாம், உயிரைக் கூட குடித்துவிடலாம்.
புகை பழக்கம் கொண்ட கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் சராசரியாக 1 முதல் 10 சிகரட்டுகள் புகைப்பாராயின் அவர்களில் 29 சதவிகிதத்தனரின் சிசுக்கள் ஊனமாய் பிறக்கிறது.இதை தவிர்த்து புகைக்கும் பழக்கம் ஒருவரின் பணத்தையும் பாழ்படுத்துகிறது என்பது நாம் அறிந்த விடயமாகும்.
கடந்த நான்கு நூற்றாண்டுகளாக புகை பழக்கத்தின் பாதிப்புகள் சரிவர அறியாமலே இருந்தது.ஆதலால் புகை பிடிப்பதின் பக்கவிளைவுகளும் கட்டுபாடின்றி வளர்ந்து கொண்டே இருந்தது.புகையிலையின் பக்க விளைவுகளை உணர்த்தும் நோக்கில் விழிப்புணர்வு பட்டரைகளும் விளம்பரங்களும் அதிகரிக்கப்பட்டன. ஆனால் புகைப்பவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.புகைப்பவரிடையே உண்டாகும் புற்றுநோயும், மாரடைப்பும் பிரிட்டனில் ஏற்படும் 30% மரணத்திற்கு முக்கிய காரணமாய் அமைக்கிறது.
புகை பழக்கத்தை விடுவோமேயானல் அதன் பலன்கள் ஐந்து வருடத்தில் நம்மால் உணர முடியும் என்கிறது ஒரு தகவல்.புகைக்கும் பழக்கம் ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும்.உடலுறவில் அதிருப்தியும் புத்திர பாக்கியமும் குறைந்து போகும்.ஒரு ஆய்வின்படி புகைபிடிக்கும் ஆண்களில் 30-40 வயதிற்குட்பட்ட 50 சதவிகிதத்தினருக்கு ஆண்மை வீரியம் குறைந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
புகை பழக்கம் கொண்டவர்கள் விரைவாகவே முதுமைத் தன்மையோடுக் காட்சியளிப்பார்கள்.இது புகை பிடிக்காதவரைக் காட்டினும் ஆண்களுக்கு 2 மடங்கும் பெண்களுக்கு 3 மடங்கும் ஒப்பானதாகும்.இதற்கு என்ன காரணம்? சிகரட்டு புகை நம் உடலில் காணப்படும் A வகை விட்டமினைக் குறைக்கும்.விட்டமின் A நமது தோல் பாதுகாப்பிற்குடையதாகும்.இவ்விட்டமின் குறைவினால் இயல்பான வயதை விட முதுமை தோன்றமே முந்தி நின்று காட்சி அளிக்கும்.
புகையிலையில் காணப்படும் "Acetyl debate" எனப்படும் இரசாயனம் நமது உடலில் காணப்படும் C வகை விட்டமீன்களை குறைத்துவிடும் தன்மையைக் கொண்டது.ஒரு துண்டு சிகரட்டு புகைப்பவரின் உடலில் காணப்படும் 20மில்லிகிராம் C வகை வைட்டமின்களை அழிக்கிறது.
ஒரு சிகரட்டின் 15% பாதிப்பு புகைப்பவரையும் 85% பாதிப்பு சிகரட்டிலிருந்து வெளியேறும் புகைவழியே சுற்றதாரையும் பாதிக்கிறது.அதாவது புகை உறுஞ்சுபவரை காட்டினும் அவரை சுற்றி இருப்பவருக்கே பாதிப்புகள் பல மடங்கு அதிகமாக உள்ளது.முக்கியமாக குழந்தைகள் பெரியவர்களை காட்டினும் விரைவாக சுவாசிப்பார்கள், அப்படி சுவாசிக்கப்படுபவர்கள் இளம் பிராயத்திலேயே பாதிப்படைகிறார்கள்,நோய்க்குற்படுகிறார்கள்.
70 கோடி சிறார்கள் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் வீடுகளில் வாழ்வதாக குறிப்பிடுகிறார்கள்.சிகரட்டு புகை, சிறார்களின் உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சியை பாதிக்கக் கூடியது. அமேரிக்க ஆய்வறிக்கை ஒன்று மிதமான சிகரட்டு புகையில் பாதிக்கப்படும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட ஆய்வின்படி அவர்களிடையே படிக்கும் மற்றும் சிந்திக்கும் திறன் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக காட்டுகிறது.
புகை பழக்கம் கொண்டவர்கள் முல்லங்கி,ரசம் உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் புகை பழக்கத்தில் இருந்து விடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளதென ஓர் தகவல் விளக்கம் கொடுக்கிறது.
என்னதான் நாம் பாதிப்புக்களை எடுத்து கூறினாலும்,புகை பிடிப்பவர் அதனை உணராவிடின் உலகிலுள்ள அத்தனை கடவுள்களும் ஒன்றாக சேர்ந்து வந்தாலும்,புகை பிடிப்பவர்களை தடுக்க முடியாது.எனது தனிப்பட்ட கருத்தானது,"பொருளாதார காரணியை மட்டுமே கருத்திற் கொண்டு புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் அரசானது,அதனால தனது பிரஜைகள் இறக்கின்றனர் என்பதனை ஏன் தடுக்க வில்லை.பொருளாதாரம் முக்கியமா?பிரஜைகளின் உயிர் முக்கியமா?புகையிலை பொருட்கள் இருப்பதனாலதானே புகை பிடிக்கிறான்!ஆகவே அதனை நிறுத்திவிட்டால்,தடை செய்தால் பிடிப்பதற்கு யார் இருப்பார்?ஆனால் ஒரு போதும் அரசாங்கம் அதனை செய்யாது.ஆனால் பெண்கள் நினைத்தால் முடியும்."புகைபிடிக்ணும் ஆண்களை காதலிக்கவோ,திருமணம் பண்ணவோ மாட்டோம்"என்று உறுதி மொழி எடுத்தால் அது சாத்தியப்படலாம்?..ஆனால் எடுப்பார்களா பெண்கள்?

Reviewed by NEWMANNAR
on
July 23, 2016
Rating:

No comments:
Post a Comment