இன்றைய (24-07-2016) கேள்வி பதில்
கேள்வி பதில் -வாசகர்களுக்கான அறிவித்தல்
எமது மன்னார் இணையத்தில் தினமும் வெளிவரும் வாசர்களுக்கான கேள்வி பதில் - பகுதி இனிமேல் வாசர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வாரத்தில் மூண்று நாட்கள் பிரசுரிக்கப்பட உள்ளது .
கேள்வி:-
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் சுதன் ஐயா!நான் மட்டக்களப்பு நாவற் காட்டிலிருந்து சண்முகம்.ஐயா!நீண்டகால குத்தகையில் பெறும் காணிகளுக்கு எவ்வளவு குத்தகைப்பணம் செலுத்த வேண்டும்.அதன் நடமுறை என்ன?
பதில்:−
அன்பான சகோதரரே! இலங்கை காணியுறுத்துச் சட்டத்தின் படி,குத்தகை நிபந்தனையில் உள்ளவாறு குத்தகை செலுத்தவேண்டும்.முதல் வருடம் மட்டும் குத்தகைப்பணமும் அடாத்துக்காணியாயின் தண்டப்பணமும்,முறையாக வழங்கப்பட்ட காணியாயின் வருட குத்தகையுடன் பிறீமியம் (Premium)அறவிடப்படும். அதன் பின் குத்தகை வருடா வருடம் அறவிடப்படும். தண்டப்பணம் = அபிவிருத்தி அடைந்த பெறுமதியின் 4வீதமும் அதன் மூன்று மடங்கும் அறவிடப்படும்
(உ–-ம்) அபிவிருத்தியடைந்த பெறுமதி 10000ரூபா எனின் தண்டப்பணம் = 100,000 x 4/100 x 3 = 12,000/- வாகவிருக்கும்.
(பிரிமியம்) = அபிவிருத்தி அடையாத பெறுமதியின் 4வீதமும் அதன் 3 மடங்கும், இதனுடன் குத்தகைக் காசு சேர்த்து முதல் வருடம் கட்ட வேண்டும்.குத்தகைக்காசு அபிவிருத்தி அடையா பெறுமதியின் நான்குவீதமாக கணிக்கப்படும்.
உதாரணமாக அபிவிருத்தி அடையா பெறுமதி ரூபா 50,000 எனின் குத்தகை = 50000 x 4/100 = ரூபா 2000 = ஆகவே குத்தகை அமையும்.
காணி ஒன்றுக்காக விலை மதிப்பீட்டாளரிடம் மதிப்பீட்டை பெற விண்ணப்பிக்கும் போது காணியின் அபிவிருத்தியடையாத பெறுமதியும் அபிவிருத்தி அடைந்த பெறுமதியும் பெறவேண்டும்.(ஆண்டுக்கான குத்தகைக்குரிய குத்தகைக் கூலிக்கான வீதம் காணிக்கட்டளை 217 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.)சில குத்தகை 5 வருடங்களுக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்படும்.
ஆறாவது வருடம் 50வீதத்தை மிஞ்சாத வகையில் கூடுதலாக அறவீடு கட்ட மீளாய்வு செய்யப்படும். குறிப்பாக வர்த்தக நடவடிக்கைக்காக வழங்கப்படும் காணிகளுக்கு இது பொருந்தும்.
குத்தகை காலம் முடிவடைய முதல் குத்தகை அறவீடு கட்டப்படல் வேண்டும்.இல்லையேல் 10வீதம் தண்டபணம் மேலதிகமாக அறவிடப்படும்.அடுத்த 3 மாதத்திற்கு மேல் குத்தகை அறவீடு கட்டாதவருக்கு உதாரணமாக மாசி மாதம் குத்தகை கட்டப்படும் இறுதி நாளானால் வைகாசிக்கு முன் அவர் குத்தகை கட்டாவிட்டால் வைகாசிக்குப் பின் 10வீதம் மேலதிக தண்டப்பணம் சேர்த்து அறவிடப்படல் வேண்டும்.
இருப்பினும் பிரதேச செயலாளர் குத்தகைக்காரருக்கு குத்தகை அறவீடு பற்றி ஒவ்வொரு வருடமும் குத்தகை அறவிடப்படும் இறுதி நாளுக்கு முன்னமே அது பற்றிய தகவல் அடங்கிய கடிதத்தை அனுப்ப வேண்டும்.இது பற்றி காணி ஆணையாளரின் சுற்று நிருபம் இல. 96/05 தெளிவுபடுத்தியுள்ளது.

ஞாயிறு ,புதன் மற்றும் வெள்ளி நாட்களில் பிரசுரிக்க படும் என்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம் .

உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.
கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
<20 .07.2016="" br="">20>
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.
கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
<20 .07.2016="" br="">20>
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் .
இன்றைய (24-07-2016) கேள்வி பதில்
Reviewed by NEWMANNAR
on
July 24, 2016
Rating:

No comments:
Post a Comment