அண்மைய செய்திகள்

recent
-

புவி வெப்பமயமானதால் நீர்மட்டம் உயர்வு: பசிபிக் கடலில் மூழ்கிய 5 தீவுகள்


காற்றில் அதிக அளவில் காபனீரொட்சைட் வாயு வளிமண்டலத்தில் கலப்பதால் வளி மாசடைந்து புவி வெப்பமயமாகி வருகிறது. இதனால் பருவநிலை மாற்றங்களும் எற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் கடலில் நீர் வெப்ப மயமாகியதனால் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தென் பசிபிக் கடல் பகுதியில் இருந்த 5 சிறிய தீவுகள் கடலில் மூழ்கி விட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 6 தீவுகள் படிப்படியாக மூழ்கி அழிந்து வருகின்றன. இத்தகவல் அவுஸ்திரேலியாவின் சி.எஸ். ஐ.ஆர்.ஓ நிறுவனம் மற்றும் சீன கடல் பல்கலைக் கழகத்தினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடல் நீர் வெப்பமயமாவதால் பசுபிக் கடல் பரப்பை விட இந்திய பெருங்கடலின் பரப்பளவு அதிகரித்து வருவதாகவும், ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.





புவி வெப்பமயமானதால் நீர்மட்டம் உயர்வு: பசிபிக் கடலில் மூழ்கிய 5 தீவுகள் Reviewed by Author on July 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.