தமிழ் மொழி அமுலாக்கத்துக்கு வரவு செலவு திட்டத்தில் நிதியொதுக்கீடு!
2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இருந்து இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்கள மற்றும் தமிழ் மொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
தேசிய மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசன் சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று இடம்பெற்ற போது அமைச்சர் கயந்த கருணாதிலக இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் அரச கரும மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
2020ம் ஆண்டளவில் பொதுமகன் ஒருவர் அரச நிறுவனம் ஒன்றில் தாம் விரும்பிய மொழியில் தமக்கான தேவையை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை இலக்காக கொண்டு இந்த யோசனை அமைச்சர் மனோ கணேசனால் முன்வைக்கப்பட்டதாக கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.
இதேவேளை 1980ம் ஆண்டு காலப்பகுதிக்கு பின்னர் வடக்கில் இருந்து தமிழ் மக்கள் இடம்பெயர்ந்ததை போன்று முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் இடம்பெயர்ந்தனர்.
இதனடிப்படையில் முஸ்லிம் மக்களுக்கென பதினாறாயிறத்து 120 வீடுகளும் சிங்கள மக்களுக்கு ஐயாயிரத்து 545 வீடுகளும் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அத்துடன் அந்த குடும்பங்களுக்கான அத்தியாவசிய தேவைகள் பிள்ளைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் என்பவற்றை கவனிப்பதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரின் இணைத்தலைமையில் செயலணி ஒன்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.
தமிழ் மொழி அமுலாக்கத்துக்கு வரவு செலவு திட்டத்தில் நிதியொதுக்கீடு!
Reviewed by Author
on
July 07, 2016
Rating:

No comments:
Post a Comment