மகளின் கரு முட்டைகளை போராடி பெற்றுக்கொண்ட 60 வயது தாய்! பிரித்தானியாவில் சம்பவம்
தனது மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, மகளின் உறைய வைத்த கரு முட்டைகளை நீண்ட போராட்டத்தின் பின்னர் 60 வயதான தாய் ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. தனது 23 வயதான மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதனால் கரு முட்டைகளை உறைய வைத்திருந்த அவர், ஐந்தாண்டுகளுக்கு பின்னர் உயிரிழந்துள்ளார்.
உறைய வைக்கப்பட்ட தனது கருமுட்டைகள் மூலம் தனது தாயே குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என அவர், விரும்பினார்.
எனினும், எழுத்து பூர்வமாக தனது விருப்பத்தைத் தெரிவிக்காத நிலையில் அவர், உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக, செயற்கைக் கருத்தரிப்பு முறையால் குழந்தை பெறும் முறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பு, அக்கருமுட்டைகளை வெளியே எடுக்க அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.
அதனை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்துள்ளது.
இதேவேளை, மகளின் உண்மையான விருப்பம் தொடர்பாக போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மகளின் கரு முட்டைகளை போராடி பெற்றுக்கொண்ட 60 வயது தாய்! பிரித்தானியாவில் சம்பவம்
Reviewed by Author
on
July 01, 2016
Rating:

No comments:
Post a Comment