அண்மைய செய்திகள்

recent
-

அனைத்துலக விசாரணையே தமிழர்களுக்கு நம்பிக்கை! ஐ.நா சபையில் தெரிவிப்பு...


இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிறந்த வரலாற்றுக்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை.

ஆகையினால், அனைத்துலக விசாரணை பொறிமுறையையே, தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும்’ என ஈழத் தமிழ் மக்கள் சர்வதேசப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

ஈழத் தமிழ் மக்கள் சர்வதேசப் பேரவையின் வெளிவிவகார அலுவலர் டி. திருக்குலசிங்கம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினர் அதிகளவான காணிகளை கையகப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு அதிகளவான காணிகள் கையகப்படுத்தியுள்ள போதிலும், 4000 ஏக்கர் காணிகளே தற்போது வரையிலும் விடுவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விரைவாக பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். எனினும் குறித்த விடயம் தொடர்பில் இலங்கை தலைவர்களின் மத்தியில் முரண்பட்ட கருத்துக்களே காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக விசாரணையே தமிழர்களுக்கு நம்பிக்கை! ஐ.நா சபையில் தெரிவிப்பு... Reviewed by Author on July 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.