அண்மைய செய்திகள்

recent
-

பெருவெள்ளத்தில் சிக்கிய 6000 பன்றிகள்: விவசாயி எடுத்த அதிர்ச்சி தரும் முடிவு.....


சீனாவில் பெருவெள்ளத்தில் சிக்கிய 6000 பன்றிகளை காப்பாற்ற முடியாமல் அதன் உரிமையாளர் கண்ணீருடன் விடைபெற்று செல்ல முடிவு செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஷுசெங் மாகாணத்தில் பருவமழை தொடங்கி கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பலத்த சேதம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பெய்லின் நகரில் அமைந்துள்ள பன்றி வளர்ப்பு கொட்டகையில் உள்ள 6000 பன்றிகள் இந்த பெருவெள்ளத்தில் சிக்கி தவித்தவண்ணம் உள்ளது. கொட்டகை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பன்றிகள் அந்த தண்ணீரில் சிக்கியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய பன்றிகளை மீட்டு வேறு பகுதிக்கு மாற்றும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் சென்று முடிந்துள்ள நிலையில், அதன் காப்பாளர் எடுத்த முடிவு வருத்தமளிப்பதாக அமைந்துள்ளது.

அந்த கொட்டகையில் இருந்து சில எண்ணிக்கையிலான பன்றிகளையும் தொழிலாளர்களையும் அருகாமையில் உள்ள நிறுவனத்தார் மீட்டு பத்திரமாக வேறு பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் எஞ்சிய பன்றிகளை மீட்பது முடியாத நிலை என கூறப்படுகிறது. சில பன்றிகள் பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை உதவிக்கு அழைத்துள்ளார் அந்த கொட்டகையில் காப்பாளர். இருந்தும் மொத்த பன்றிகளையும் காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பன்றி கொட்டகையை பன்றிகளுடன் விட்டு விட்டு அங்கிருந்து தப்பித்துக்கொள்ள விவசாயி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தென் மற்றும் மத்திய சீனா பகுதிகளில் பெருக்கெடுத்துள்ள பெருவெள்ளத்திற்கு கடந்த 3 நாட்களில் மட்டும் 93 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 19 பேர் மாயமாகியுள்ளனர்.

லட்சக்கணக்கானோர் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். பெருமழையால் மட்டும் இப்பகுதியில் 20 பில்லியன் யுவான் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெருவெள்ளத்தில் சிக்கிய 6000 பன்றிகள்: விவசாயி எடுத்த அதிர்ச்சி தரும் முடிவு..... Reviewed by Author on July 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.