போதைபொருள் கடத்திய 76 வயது பாட்டி: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்....
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பாட்டி ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதித்து வியட்நாம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Nguyen Thi Huong என்ற 76 வயது பாட்டி ஒருவர் 1.6kg போதைபொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார், இது தொடர்பான வழக்கு வியட்நாம் Ho Chi Minh City நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இப்பெண்மணி, தான் கொண்டு சென்ற பொருளில் போதைபொருள் இருந்தது தெரியாது என்று கூறியுள்ளார், இருப்பினும் பிரதிவாதியின் பதிலை ஏற்க மறுத்த நீதிபதி அவருக்கு மரணதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எனது உடல்நிலை மோசமாக உள்ளது என கூறி அவர் மேல்முறையீடு செய்துள்ளார், ஆனால் இந்த மேல்முறையீடு தோல்வியடையும் வீதத்தில், விஷ ஊசி மூலம் இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.
இந்த வழக்கு குறித்து அவுஸ்திரேலியா வெளியுறத்துறை அமைச்சர் கூறியதாவது, தூதரகம் சார்பில் அவருக்காவும், அவரது குடும்பத்தினருக்காகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார்.
உலக நாடுகளில் போதைபொருள் கடத்தல் வழக்கில் கடுமையான சட்டங்களை பின்பற்றி வரும் நாடுகளில் வியட்நாம் நாடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
போதைபொருள் கடத்திய 76 வயது பாட்டி: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்....
Reviewed by Author
on
July 01, 2016
Rating:

No comments:
Post a Comment