கூட்டமைப்பின் நிதானமே வெற்றிக்குக் காரணம்!- ஜெனிவா அமர்வு குறித்து சம்பந்தன் கருத்து....
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விவகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புநிதானமாகக் கையாண்டது. அதனூடாகவே திருப்திகரமான வெற்றி எமக்குக்கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் உறுப்பு நாடுகளும்வலியுறுத்திய விடயங்களை இலங்கை அரசு கவனத்தில் எடுத்துச் செயற்படவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமானஇரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடுஎன்ன என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தமிழ்ப் பத்திரிகை ஒரு வினவியது.
அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையையும், இலங்கை தொடர்பான அமர்வில்பங்கேற்ற மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், இலங்கைக்கு அழுத்தம்கொடுக்கும்வகையில் தெரிவித்த கருத்துகளையும் நான் மனதார வரவேற்கின்றேன்.
உண்மையை நிலைநாட்டும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையும்,உறுப்புநாடுகளின் அழுத்தமும் அமைந்துள்ளன.
ஐ.நா. தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக இந்தக்கருமத்தைக் கையாண்டது. அதில் திருப்திகரமான வெற்றியையும் கூட்டமைப்புபெற்றுள்ளது.
மேலும், நாம் இதனை நிதானமாக முன்னெடுக்க வேண்டிய சூழலில்இருக்கின்றோம்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதன்படியும், உறுப்பு நாடுகள் தெரிவித்ததன் அடிப்படையிலும் இலங்கை அரசு செயற்படவேண்டும் என்றார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்றுவருகின்றது.
இதில், இலங்கை தொடர்பில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டதீர்மானத்தின் வாய்மூல அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் பேரவையில்சமர்ப்பிக்கப்பட்டது.
இதில் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறையில்பன்னாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை உள்வாங்க வேண்டும் என்றுகுறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், முன்னேற்றங்கள் போதாது எனவும், வடக்கு,கிழக்கில் இராணுவப் பிரசன்னம் தொடர்ந்து நிலவுவதாகவும் அவரது அறிக்கையில்தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள்,இலங்கை பொறுப்புக்கூறல் பொறிமுறையில் பன்னாட்டு நீதிபதிகளை உள்ளீர்க்க வேண்டும்என்று வலியுறுத்தியிருந்தன.
இந்தக் கருத்துகளையே கூட்டமைப்பின் தலைவரும்எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பின் நிதானமே வெற்றிக்குக் காரணம்!- ஜெனிவா அமர்வு குறித்து சம்பந்தன் கருத்து....
Reviewed by Author
on
July 01, 2016
Rating:
Reviewed by Author
on
July 01, 2016
Rating:


No comments:
Post a Comment