மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் தந்தை.-இன்றைய (31-07-2016) கேள்வி பதில்
கேள்வி-
மதிப்பிற்குரிய சட்டத்தரணி சுதன் சர் என் பெயர் (× - × - ×)! நான் மட்டுமே பிள்ளை.நான் தற்பொழுது உயர்தரம் படிக்கிறேன்.எனது அப்பா நிறைய குடிப்பார்.குடித்தால் அவர் அவராக இருப்பதில்லை.அம்மாவிற்கு அடிப்பார்.சில வேளை அம்மாவிற்கு மண்டையைக்கூட உடைத்திருக்கிறார்.ஆனால் எனக்கு அப்பா அடித்ததில்லை.அது பாசம் என்றுதான் நானும் அம்மாவும் நினைத்தோம்.காலப்போக்கில் அவரது எண்ணத்தினை அறிந்த போதுதான் நானும் அம்மாவும் தற்கொலை செய்வோமா என்று முடிவெடுத்தோம்.அப்பா என்று கூப்பிடவே அருவெறுப்பாக உள்ளது.அம்மா அடிக்கடி சொல்வா அப்பா இருக்கும் போது தனியாக இருக்க வேண்டாம், குளிக்க வேண்டாம்..சொல்லவே அழுகையாக இருக்கு சார். ஒரு தடைவை நான் துாங்கிய பின் யாரோ ... முடியவில்லை சர் .. சாகணும் போல இருக்கு.அம்மாவிடம் வெளிப்படையாகவே சொல்லிட்டார்.என்னால இதுக்கு மேல சொல்ல முடியவில்லை சர். புரிச்சிப்பீங்க என்று நினைக்கிறேன் சர். அப்பாமார் இப்படி இருப்பாங்களா சர். எனக்கு அப்பா என்றால் ரொம்ப பிடிக்கும் சர். இப்படிபட்ட அப்பாவ விரும்பினால் அம்மா என்னை என்ன சர் நினைப்பாங்க? என்னால படிக்க முடியல சார். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் எனக்கு இறுதி பரீட்சை இருக்கு சார். எனக்கு நல்ல வழியினை கூறுங்கள் ஐயா. எனது பெயரை தங்களிடம் சொல்லிவிட்டேன்.யாரையும் யாரிடமும் காட்டிக் கொடுக்காத தங்களது மனசறிந்து எனது இரகசியத்தினை கூறுகிறேன்.எனக்கு நல்லதொரு தீர்வு தாருங்கள் ஐயா
Suthan சட்டம் அவர்களின் பதில்: -
சகோதரியே அன்பான! இந்த பிரச்சனை தங்களுக்கு மட்டும் இல்லை.சில பெண் பிள்ளைகளுக்குண்டு.தங்களது தந்தை குடி போதையினால் அத்தகை தவறினை செய்யவில்லை.அது ஒரு வகையிலான "ஹோமோ செல்" பிரச்சனை.அதற்கு நீங்கள் காரணமில்லை.அது ஒரு புறமிருக்கட்டும்.தற்போது தங்களுக்கு இறுதி தேர்வில் நடைபெறவிருப்பதனால் மன ஆறுதல் மற்றும் பாதுகாப்பு அவசியம்.பரீட்சைக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதனால் படிப்பில் மாத்திரம் கவனம் செலுத்துங்கள்.அதற்கு இடத்தினை மாற்றி பாதுகாப்பான இடத்திலிருந்து படிக்கவும்.படித்து பல்கலைக்கழகப் போனால் இப்பிரச்சனை படிப்படியாக குறைந்துவிடும்.மாறாக தங்களது தந்தையை இச் சமயம் தண்டித்தால் அல்லது அது சார் நடவடிக்கை எடுத்தால் தங்களது மனநிலை பாதிப்படையலாம்.காரணம் தந்தை மீது அதீத அன்பு வைத்துள்ளீர்கள்.அத்துடன் தங்களுக்கு இப்போது பிரச்சனை தங்களது தந்தையைவிட தங்களுடைய மனநிலைதான் .தந்தைக்கு சமமான ஒரு ஆணின் அன்பு, அரவணைப்பினை தங்களது மனசு எதிர்பார்க்கின்றது.அது பிற ஆண்களின் அனுதாபத்தினை வெற்றுவிடும்.யாராவது ஒருவர் அன்பு காட்டினால் அவர் நல்லவர், கெட்டவர் பார்க்காது மனசை பறிகொடுத்து பின்தவறான ஆடவரினால் ஏமாற்றப்படலாம்.ஆகவே தற்போது தாங்கள் செய்ய வேண்டியது பாதுகாப்பான இடத்திலிருந்து நன்றாக படியுங்கள்.தங்களது தந்தைசார் பிரச்சனைக்கு தீர்வு பல்கலைக்கழகம் செல்வதேயாகும். பல்கலைக்கழகம் சென்று விடுதியில் தங்கி படிப்பதனால் தந்தையை விட்டு விலகியிருக்க வாய்ப்பு கிடைக்கும்.பின் படிப்பினை முடித்த பின் திருமணமானால் பிரச்சனை முடிந்துவிடும்.ஆகவே தங்களது அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு படித்து பல்கலைக்கழகம் அல்லது கல்விக் கல்லூரிக்கு செல்வதேயாகும்.படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.தாங்கள் இடம் மாறி படிக்கும் போது ஒரு வேளை தங்களது தந்தை பிரச்சனை கொடுத்தால் எமது செய்தி தளத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.அதற்கான வழி செய்து தருவோம்.எமக்கு அனைத்து மாவட்டத்திலும் நல்லுள்ளங்கள் உள்ளனர்.அவர்கள் தங்களுக்கு சகோதர ரீதியில் உதவ தயாராகவே உள்ளனர்.
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் தந்தை.-இன்றைய (31-07-2016) கேள்வி பதில்
Reviewed by NEWMANNAR
on
July 31, 2016
Rating:

No comments:
Post a Comment