அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் அமைச்சர் றிசாட் க்கு ஆதரவாக மீண்டும் களத்தில் டெனீஸ்வரணும் சத்தியலிங்கமும்

வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் வடமாகாண முதலமைச்சரை திசை திருப்ப மாகாண அமைச்சர்கள் இருவர் முயற்சி எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி போக்குவரத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரே இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவின் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என இழுபறி நீடித்து வரும் நிலையில் வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகிய இருவரும் கலந்துரையாடி இப் பொருளாதார மத்திய நிலையத்தை இரண்டாக பிரித்து கடல் உணவு மையம் ஒன்றினை மாங்குளத்திலும், மரக்கறி வகைகளுக்கான பொருளாதார மையத்தை வவுனியாவின் மூன்றுமுறிப்பு பகுதியிலும் அமைப்பது தான் சிறந்தது என வடமாகாண முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

இதற்காக ஏனைய இரு அமைச்சர்களிடமும் அனுமதியை கோரியுள்ளனர். இதனை முதலமைச்சரும் ஏற்றுக் கொண்ட நிலையிலயே நிபுணர்கள், மக்கள் மத்தியில் இவ்விரு பொருளாதார மத்திய நிலையம் என்ற கருத்துக்கு எதிர்புப் கிளம்பியுள்ளது.

இதனையடுத்து நிலைமையை புரிந்து கொண்ட வடக்கு முதலமைச்சர் தற்போது இந்த விடயம் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் மற்றும் மக்கள் கருத்துகளைப் பெற்று வருகிறார் என தெரியவருகிறது.

இதன் பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இவ்வாறான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தக் கூறுமாறு மத்திய அமைச்சர் ஒருவரே அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், மத்திய அமைச்சரின் தூண்டுதலில் தான் அவர் முதலமைச்சரின் பொருளாதார மத்திய நிலைய இடத்தெரிவை எதிர்த்து அமைச்சர் றிசாட் பதியுதீன் கோரும் இடத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.




வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் அமைச்சர் றிசாட் க்கு ஆதரவாக மீண்டும் களத்தில் டெனீஸ்வரணும் சத்தியலிங்கமும் Reviewed by NEWMANNAR on July 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.