காத்தான்குடியில் விடுதலைப் புலிகளின் இலக்கத்தகடு சயனைட் குப்பி அடையாள அட்டை மீட்பு

நேற்றிரவு இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவிலங்குதுறை கிராமத்திலுள்ள காளிகோவில் வீதியில் தங்கரசா தவேந்திரன் என்பவருக்கு சொந்தமான காணியில் சுற்று வேலி அமைப்பதற்காக குழி வெட்டிக் கொண்டிருந்த போது, மேற்கண்டபொருட்கள் காணப்பட்டுள்ளன.
இதுதொடர்பில், பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர், அங்கு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த கைக்குண்டு மற்றும் சயனைட் குப்பி மற்றும் த.வி.பு என பொறிக்கப்பட்ட இலக்கத்தகடு பழுதடைந்த நிலையிலான அடையாள அட்டை என்பவற்றை மீட்கப்பட்டுள்ளன.
மேலும் கைக்குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
காத்தான்குடியில் விடுதலைப் புலிகளின் இலக்கத்தகடு சயனைட் குப்பி அடையாள அட்டை மீட்பு
Reviewed by NEWMANNAR
on
July 20, 2016
Rating:

No comments:
Post a Comment