அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறுவர் துஸ்பிரையோகங்களை தடுப்பது குறித்து விழிர்ப்புணர்வு கலந்துரையாடல்.(படம்)

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துஸ்பிரையோகங்களை தடுக்கும் வகையில் சமூக மட்டத்தில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டின் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் விழிர்ப்புணர்வு கலந்துரையாடல் இடம் பெற்றது.

மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த விழிர்ப்புணர்வு கலந்துரையாடலில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா,வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தெண்ணகோண்,மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.எஸ்.என்.பீரிஸ்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜெயசேகர,மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர் மற்றும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஸ்பிரையோகங்கள் குறித்தும் அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த விழிர்ப்புணர்வு கலந்துரையாடலில் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள்,பெண்கள் அமைப்பின் பிரதி நிதிகள்,கிராம மட்ட தலைவர்கள், கிராம அலுவலகர்கள், சர்வமதத்தலைவர்கள்,ஆசிரியர்கள் என பல நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



-மன்னார் நிருபர்-

(26-07-2016)











மன்னாரில் சிறுவர் துஸ்பிரையோகங்களை தடுப்பது குறித்து விழிர்ப்புணர்வு கலந்துரையாடல்.(படம்) Reviewed by NEWMANNAR on July 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.