வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை மீளப்பெறுமாறு கூட்டமைப்பு வலியுறுத்தல்
வடமாகாண மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கத்தல் அமைக்கப்பட்டுள்ள செயலணியை மீளப்பெறவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பொது எதிரணியின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண மீள்குடியேற்றம் தொடர்பில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன் உள்ளடங்கிய செயலணி ஒன்று அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பான அரசாங்கத்தின் இந்த செயலணியில் வடக்கு மக்களின் பேராதரவைப்பெற்ற வடமாகாண முதலமைச்சர் உள்வாங்கப்படவில்லை. வடக்கு மக்களின் ஆணையைப்பெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் உள்வாங்கப்படவில்லை.
வடக்கு மாகாண சபையையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் புறக்கணித்தே அரசாங்கத்தால் இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் செயற்பாடுகள் எப்படி நியாயபூர்வமாக இருக்கும் என எதிர்பார்க்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தால் தான்தோன்றித்தனமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலணிக்கு எதிராக வடக்கு மாகாண சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த செயலணியை வடமாகாண சபை மாத்திரமல்ல தமிழ்தேசிய கூட்டமைப்பும், வடக்கு மாகாண மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்த சார்ல்ஸ் நிர்மலநாதன் அரசு அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பொது எதிரணியின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண மீள்குடியேற்றம் தொடர்பில் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன் உள்ளடங்கிய செயலணி ஒன்று அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் புறக்கணித்தே அரசாங்கத்தால் இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதன் செயற்பாடுகள் எப்படி நியாயபூர்வமாக இருக்கும் என எதிர்பார்க்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தால் தான்தோன்றித்தனமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலணிக்கு எதிராக வடக்கு மாகாண சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த செயலணியை வடமாகாண சபை மாத்திரமல்ல தமிழ்தேசிய கூட்டமைப்பும், வடக்கு மாகாண மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்த சார்ல்ஸ் நிர்மலநாதன் அரசு அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை மீளப்பெறுமாறு கூட்டமைப்பு வலியுறுத்தல்
Reviewed by NEWMANNAR
on
July 23, 2016
Rating:
No comments:
Post a Comment