அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 4 இராமேஸ்வரத்து மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.-Photos

இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை கைது செய்யப்பட்ட 4 இராமேஸ்வரத்து மீனவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலக்ஸ்ராஜா இன்று உத்தரவிட்டார்.



-இலுவைப்படகு ஒன்றின் மூலம் நான்கு இராமேஸ்வரத்து மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்கப்பில் வைத்து இன்று அதிகாலை குறித்த 4 மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

-குறித்த மீனவர்களில் ஒருவர் வயது குறைந்த சிறுவர் தொழிலாளியும் அடங்குகின்றனர்.

-இந்த நிலையில் கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட குறித்த 4 மீனவர்களும் இன்று காலை தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக இன்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 4 மீனவர்களில் 3 பேரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு,வயது குறைந்த சிறுவர் தொழிலாளியை 21 ஆம் திகதி வரை மன்னாரில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 4 இராமேஸ்வரத்து மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.-Photos Reviewed by NEWMANNAR on July 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.