அண்மைய செய்திகள்

recent
-

முழங்காவிலை உப நகரமாக உருவாக்குவது வடபுல அபிவிருத்திக்கு அச்சாணியாகும் : சிறீதரன்

முழங்காவிலை உப நகரமாக உருவாக்குவது வடபுல அபிவிருத்திக்கு அச்சாணியாகும் சிறீதரன் எம் பி தெரிவிப்பு
வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சினால் முழங்காவில் பிரதேசத்தின் அபிவிருத்தி கருதி ஒதுக்கப்பட்ட 2 மில்லியன் பெறுமதியான விளையாட்டரங்கு நிர்மாண வேலைத்திட்டம் குறித்து முழங்காவில் விநாயகர் விளையாட்டுக்கழகத்தினரோடு கலந்துரையாடல் ஒன்று 2016.07.19 அன்று முழங்காவில் பொதுநோக்கு மண்டபத்தில் காலை 10 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் இடம்பெற்றது அன் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் அதிக சனச்செறிவுடைய பிரதேசமாக முழங்காவில் திகழ்கிறது. இலுப்பைக்கடவை தொடக்கம் பூநகரி வரையான பிரதேசத்தின் மத்தியில் அமைந்துள்ளது . அதனை அடிப்படையாகக்கொண்டுதான் ஆதார வைத்தியசாலை ஒன்றும் தேசியபாடசாலை ஒன்றும் இங்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. முறிகண்டி பல்லவராயன்கட்டு வீதி புனரமைக்கப்படுகின்ற போது இப்பிரதேசத்தின் இயங்குநிலை விருத்தி அதிகரிக்கும். உண்மையிலேயே கிளிநொச்சியின் மேற்குப்பிரதேசத்தின் உப நகரின் விரிவாக்கம் ஒன்றை நாங்கள் கனவாக வைத்துள்ளோம். வலைப்பாடு நாச்சிக்குடா பகுதியில் காணப்படுகின்ற கடல்வளம் முழங்காவில் கரியாலை நாகபடுவான், பல்லவராயன் கட்டு பகுதிகளினுடைய விவசாய வளம் என்பன இப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குகிறது. அந்த வகையிலே இப் பிரதேசம் பொது விளையாட்டரங்கு ஒன்றை சகல வசதிகளோடும் வளங்களோடும் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய தூரநோக்கு எண்ணங்களால் தான் உபநகரமொன்றை சகல உட்கட்டுமானங்களோடும் உருவாக்குவது சாத்தியமாகும். எனவே விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் விளையாடும் உரிமை உறுதிப்படுத்தப்படும் வகையில் பொது விளையாட்டு மைதான புனரமைப்புப்பணிகள் தொடரும் எனத் தெரிவித்தார்
.
இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் த. குருகுலராசா, பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்ணேந்திரன் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் றிச்சாட் மோகானதாஸ், பூநகரி பிரதேசசபைச் செயலாளர் இராஜகோபால், பூநகரி பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
குறித்த கலந்துரையாடலில் பொது விளையாட்டு மைதானம் ஒன்றை நிர்மாணிப்பது எனவும் அப்பொது மைதானத்தில் விநாயகர் விளையாட்டுக்கழகத்தின் கடந்த 30 வருடகால பயன்பாட்டைக் கவனத்தில் எடுத்து அவர்களுக்கு மைதான உரிமையை வழங்குவது எனவும் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


முழங்காவிலை உப நகரமாக உருவாக்குவது வடபுல அபிவிருத்திக்கு அச்சாணியாகும் : சிறீதரன் Reviewed by NEWMANNAR on July 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.