இன்றைய (16-07-2016) கேள்வி பதில்
கேள்வி:−
பெரும் மதிப்பிற்குரிய சட்டத்தரணி Suthanlaw அவர்களே!என் பெயர் பாக்கியலக்ஸ்மி!ஐயா என் மகன் காதலித்த பெண்ணை கூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளான்.அந்த பெண் +18வயதை அடைந்து விட்டாள்.ஆனால் என் மகனுக்கு +18வயதை அடைய இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன.காதலுக்கு அவள் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு.அந்தப் பெண்ணுக்குக் கட்டாயத் திருமணம் முடிக்க அவள் பெற்றோர் முயற்சித்ததால்,ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி, என் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.இருவருக்கும் வாழ ஆசைப்படுகிறார்கள்.என் மகன் திருமண வயதை எட்டாத இந்த நிலையில் அவர்கள் இணைந்து இருக்கலாமா?
பதில்:−
அன்பான தாய் அவர்களே!’சட்டப்படி உங்கள் மகன் செய்தது தவறுதான். உங்கள் மகன் மீது பெண் வீட்டார் புகார் அளித்திருந்தால்,போலீஸார் நிச்சயம் அவர் மீது வழக்குப் பதிவு செய்வார்கள்.அப்படி உங்கள் மகனை கைது செய்து விசாரிக்கும் பட்சத்தில், பெண் மேஜராக இருப்பதால்,அவர் விருப்பப்படி முடிவு எடுக்கச் சுதந்திரம் உண்டு. ஆனால்,உங்கள் மகனுக்கு உரிய வயது வந்த பிறகுதான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடியும். பொறுத்திருங்கள்!’’
இன்றைய (16-07-2016) கேள்வி பதில்
Reviewed by NEWMANNAR
on
July 16, 2016
Rating:

No comments:
Post a Comment