அண்மைய செய்திகள்

recent
-

உலகில் உயரமான ஆண்கள் எந்த நாட்டில்; ஆய்வில் தகவல்


நெதர்லாந்து நாட்டு ஆண்கள் மற்றும் லத்வியா நாட்டு பெண்களே உலகில் உயரமானவர்கள் என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம், க்வாத்தமாலா நாட்டு பெண்களும், கிழக்கு தீமோர் நாட்டு ஆண்களும் தான் உலகிலேயே குள்ளமானவர்கள் என்று ஆய்வில் தெரிவந்துள்ளது.  

மனிதர்களின் உயரங்களில், மரபியல் தாக்கங்களால் சில மாற்றங்கள் ஏற்படலாம் எனினும் நல்ல சத்தூட்டம், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது என லண்டன் இம்பிரியல் கல்லூரியின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கத்திய சமூகங்களில் மனிதர்கள் உயரமாக வளர்வது சராசரியாக உள்ளது. மேலும் ஆபிரிக்காவின் சில இடங்களில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அவர்கள் கண்ட வளர்ச்சி குறைந்துள்ளது எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகின் உயரமானவர்களாக கருதப்படும் ​நெதர்லாந்து நாட்டவரின் சராசரி உயரம் 183 செ.மீ மற்றும் லத்வியா பெண்களின் உயரம் 170 செ. மீ, உலகில் குள்ளமானவர்களாக கருதப்படும் க்வாத்தமாலா பெண்கள் 150 செ.மீட்டர் உயரத்தை எட்டுவது அரிது எனவும் மேலும் கிழக்கு தீமோர் ஆண்களின் சராசரி உயரம் 160 செ.மீட்டர் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் உயரமான ஆண்கள் எந்த நாட்டில்; ஆய்வில் தகவல் Reviewed by NEWMANNAR on July 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.