நாளை புனித நோன்பு பெருநாள்!
ஷவ்வால் மாதத்தின் தலைபிறை இன்று மாலை தென்பட்டதை அடுத்து புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு அறிவித்துள்ளது.
ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு கூட்டம் இடம்பெற்றது.
இக்கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து இஸ்லாமிய மக்களும் நோன்புப் பெருநாளை ஒரே நாளில் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை புனித நோன்பு பெருநாள்!
Reviewed by Author
on
July 05, 2016
Rating:

No comments:
Post a Comment