பிரான்சில் பதற்றநிலை! தீவிரவாதிகளின் பிடியில் தேவாலயம்?
வடக்கு பிரான்சில் உள்ள Saint-Etienne-du-Rouvray என்ற தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய இருவர் மக்களை பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, நான்கு அல்லது ஆறு பேரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த இடத்திலிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்பதாகவும், பொலிஸ் அதிகாரிகள் விரைந்துள்ளதாகவும் France 3 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பொலிஸ் தரப்பில், நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் துப்பாக்கி ஏந்திய நபர்களை பொலிசார் கைது செய்தனரா அல்லது சுட்டுக் கொன்றனரா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
பணயம் வைத்தவர்கள் கொல்லப்பட்டனர் (2ம் இணைப்பு)
வடக்கு பிரான்ஸில் ரூவானுக்கு அருகே தேவாலயம் ஒன்றில் ஆட்களை பிடித்து பணயமாக வைத்திருந்த இரு ஆயுதபாணிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
4 முதல் 6 பேர் வரை இவர்களால் பிடித்து அங்கிருந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
ஒரு மதகுரு, இரு சகோதரிகள் மற்றும் தேவாலயத்துக்கு வந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
அங்கு பல துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டதாக பிரான்ஸ் 3 தொலைக்காட்சி கூறியுள்ளது. போலிஸாரும், அவசர உதவி சேவைகளும் அங்கு வந்து சேர்ந்துள்ளனர்.
பிரான்சில் பதற்றநிலை! தீவிரவாதிகளின் பிடியில் தேவாலயம்?
Reviewed by Author
on
July 27, 2016
Rating:

No comments:
Post a Comment