கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா? சுமந்திரனா?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது எம்.ஏ.சுமந்திரனா என்று அரசாங்கத்திற்கு சந்தேகம் வலுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்தார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்துகளை மீறி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துக்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் இவ்வாறு வெளியிடும் கருத்துக்களானது ஒருபோதும் செல்லுபடியாகாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை நியமிக்க இலங்கை அரசாங்கம் இடமளிக்கும்.
அரசியல் அமைப்பில் அதற்கான சிக்கல்கள் எதுவும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் அறிவித்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சரியான வகையில் செயற்படுகின்றது. சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் தலைவர். அவர், சரியான வகையிலான கருத்து ஒன்றை முன்வைக்கும் போது, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்வைக்கும் கருத்துக்கள் எந்தளவு முக்கியதுவம் பெறும்.?
இதனை கொண்டு அவதானிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது சுமந்திரனா என்பது குறித்த அரசாங்கத்திற்கு சந்தேகம் வலுபெற்றுள்ளது.
இதேவேளை, கூட்மைப்பின் தலைவர், பொறுப்புமிக்க கருத்து ஒன்றை முன்வைத்துள்ள நிலையில் சுமந்திரனின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனா? சுமந்திரனா?
Reviewed by Author
on
July 13, 2016
Rating:

No comments:
Post a Comment