தலைமன்னார் பகுதியில் வைத்து 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு.(படம்)
தலைமன்னார் பிரதான வீதி தலைமன்னார் சுவாமித்தோட்டம் பகுதியில் வைத்து சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை இன்று(21) ஞாயிற்றுக்கிழமை காலை மீட்டுள்ளதோடு சந்தேக நபர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் ஹெசிகன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து,மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் கண்காணிப்பில் சென்ற பொலிஸ் குழுவினர் இன்று(21) ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணியளவில் தலைமன்னார் சுவாமித்தோட்டம் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிலில் கொண்டு செல்லப்பட்ட 2 பொதிகளைக்கொண்ட 4 கிலோ 50 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளதோடு,இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் ஹெசிகன் தலைமையில் சென்ற பொலிஸ் கொஸ்தாபில்களான பண்டார(44198), றொசான்(40735),பிலிப்ஸ்(89238),பொலிஸ் சாரதி வசந்த(80873) ஆகியோர் அடங்கிய குழுவினரே குறித்த கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளனர்.
குறித்த கஞ்சா பொதிகள் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியானது எனவும்,விசாரனைகளின் பின் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் ஹெசிகன் மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
(21-08-2016)

Reviewed by NEWMANNAR
on
August 21, 2016
Rating:

No comments:
Post a Comment