பெண் சூட்கேசிலிருந்த 11 வயது சிறுவன்: விசாரணையில் வெளிவந்த உண்மை....
பிரேசில் நாட்டில் பெண் ஒருவர் 11 வயது சிறுவனை தனது சூட்கேசில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட சம்பவம் பொலிசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 வயதான Natasha Vitoriano Souto என்ற பெண், தனது உடைமைகளுடன் ரியோ டி ஜெனிரோவில் இருந்து தெற்கு பிரேசிலில் உள்ள தன் வீட்டுக்கு பேருந்தில் பயணித்து சென்றுள்ளார்.
பயணத்தின் போது Natasha Vitoriano Soutoவின் சூட்கேசிலிருந்து கை வெளியே தெரிந்துள்ளது, இதை கண்ட சக பயணிகள் பேருந்தை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் பொலிசார் நடத்திய சோதனையில் அவரது சூட்கேசில் 11 வயது சிறுவன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது, இதை கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து Natasha Vitoriano Souto கூறியதாவது, தனது தாய் போதைக்கு அடிமையாகி தன்னை அடித்து துன்புறுத்துவதாக சிறுவன் தன்னிடம் கூறி கதறியதாகவும், பின்னர் கருணையுடன் தன்னை தத்தெடுத்துக் கொள்ளும் படி சிறுவன் கெஞ்சியதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அவரை தெற்கு பிரேசிலில் உள்ள தனது வீட்டிறகு கொண்டு சென்று வளர்க்க முற்பட்டதாக Natasha Vitoriano கூறியுள்ளார்.
பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை Natasha Vitoriano Souto மீது எந்த வழக்கும் பதியவில்லை, ஆனால் அவர் சிறுவனை கடத்த முற்பட்டதாக நிரூபணமானால், அவருக்கு இரண்டு முதல் ஆறு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்ககூடும் என தெரிவித்துள்ளனர்.
பெண் சூட்கேசிலிருந்த 11 வயது சிறுவன்: விசாரணையில் வெளிவந்த உண்மை....
Reviewed by Author
on
August 05, 2016
Rating:

No comments:
Post a Comment