பாரீஸில் பயணிகள் பேருந்தை தீயிட்டு கொளுத்திய இஸ்லாமிய வாலிபர்கள்!
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பயணிகள் பேருந்து ஒன்றை இஸ்லாமிய வாலிபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரீஸில் உள்ள Saint-Denis என்ற பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் பயணிகள் பேருந்து ஒன்று சாலையில் சென்றுள்ளது.
அப்போது, பேருந்தை நோக்கி வேகமாக வந்த வாலிபர்கள் கும்பல் ஒன்று ஓட்டுனரை நோக்கி கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
‘பேருந்தில் உள்ள அனைவரும் இறங்கி ஓடுங்கள்’ எனக்கூறியதும் ஓட்டுனர் உள்பட பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் தப்பி ஓடியுள்ளனர்.
பின்னர், பேருந்து மீது Molotov என்ற ரசாயன கலவையை ஊற்றிய வாலிபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
அப்போது, அந்த இஸ்லாமிய வாலிபர்கள் ‘அல்லாஹீ அக்பர்’ என உரக்க கத்திக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைவாக சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், தீயில் பேருந்து முழுவதும் எரிந்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும், இஸ்லாமிய வாலிபர்களின் இந்த தாக்குதலின் பின்னணி தெரியவராததால் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் 2015 நவம்பர் முதல் பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்து வருவதால் அந்நாட்டு பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸில் பயணிகள் பேருந்தை தீயிட்டு கொளுத்திய இஸ்லாமிய வாலிபர்கள்!
Reviewed by Author
on
August 04, 2016
Rating:

No comments:
Post a Comment