பிரித்தானியாவில் சாதனை படைத்த 10 வயது குழந்தை....
பிரித்தானியாவில் நடைபெற்ற கேள்வி பதில் என்ற போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குழந்தைக்கு பிரித்தானியாவின் அறிவார்ந்த குழந்தை என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தனியார் தொலைக்காட்சி சார்பில் குழந்தைகளுக்கான கேள்வி பதில் என்ற போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரியா(10) என்ற குழந்தை இப்போட்டியில் பங்கேற்றிருந்தார்.
இப்போட்டியில் பல சுற்றுகளில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டன.இதில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு ரியா சரியான முறையில் பதிலளித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதி போட்டி கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்றது. இதில் ரியாவுக்கும்,பிரித்தானியாவின் சக்பி(9) என்ற சிறுவனுக்கும் இடையே போட்டிகள் பலமாக இருந்தன.
இதனால் போட்டியாளர்களான ரியா மற்றும் சக்பி இடையே ஆங்கில வார்த்தைகளான eleemosynary மற்றும் charitable உச்சரிப்பை தெரிவிக்கும் படி கூறப்பட்டிருந்தது.
அந்த ஆங்கில வார்த்தைகளுக்கான சரியான உச்சரிப்பை ரியா தெளிவாக உச்சரித்தார். இதனால் பிரித்தானியாவின் அறிவார்ந்த குழந்தை என ரியா தேர்வு செய்யப்பட்டர்,அவருக்கு அதற்கான விருதும் வழங்கப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற ரியாவுக்கு பல்வேறு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் இது போன்ற அறிவார்ந்த குழந்தை வளர்த்தற்காக அவரது பெற்றோருக்கு டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து மழை பொழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் சாதனை படைத்த 10 வயது குழந்தை....
Reviewed by Author
on
August 04, 2016
Rating:

No comments:
Post a Comment