மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட வலைத்தொகுதிகளை பயண்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 3 மீனவர்கள் கைது.
மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை பயண்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இன்று வியாழக்கிழமை காலை கைது செய்த கடற்படையினர் குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைத்தொகுதிகள் 5 ஐ பயண்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட போதே கடற்படையினர் குறித்த மீனவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 3 மீனவர்களிடமும் விசாரனைகளை மேற்கொண்ட கடற்படையினர்,பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளதோடு கைப்பற்றப்பட்ட வலைத்தொகுதிகளையும் ஒப்படைத்தனர்.
குறித்த 3 மீனவர்களிடமும் வாக்கு மூலத்தை பதிவு செய்த கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வளக்குத்தாக்கல் செய்து குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட வலைத்தொகுதிகளை பயண்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 3 மீனவர்கள் கைது.
Reviewed by NEWMANNAR
on
August 12, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 12, 2016
Rating:

No comments:
Post a Comment