அண்மைய செய்திகள்

recent
-

கடலில் மீனவனுக்கு கிடைத்த ரூ.1,455 கோடி மதிப்புள்ள முத்து

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில் பெயர் வெளியிடப்படாத மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது, கடலில் புயல் வீசத்தொடங்கியபோது பாதுகாப்பிற்கு நங்கூரத்தை வீசியுள்ளார். ஆனால், அந்த நங்கூரம் பாறை ஒன்றில் சிக்கியுள்ளது.

நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தப்போது அதில் மிகப்பெரிய முத்து ஒன்று சிக்கியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஆனாலும், அந்த முத்துவின் மதிப்பு பற்றி அறியாத அவர் அதனை ஒரு ராசிக்கல்லாக வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார்.

ஒரு மாதம் இரண்டு மாதம் அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக அந்த அரிய முத்துவின் மதிப்பு தெரியாமல் அதனை வீட்டிலேயே வைத்துள்ளார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அவர் வசித்து வந்த மரத்தால் செய்யப்பட்ட வீடு திடீரென தீவிபத்திற்கு உள்ளானதும் அந்த முத்துவை எடுத்துக்கொண்டு மற்றொரு வீட்டிற்கு குடி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, அப்பகுதியில் வசித்து வந்த சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் எதிர்பாராத விதமாக இந்த முத்துவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து விலையில்லா கற்கள் பற்றி ஆய்வு செய்து வரும் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 34 கிலோ எடையுள்ள அந்த முத்துவை ஆய்வு செய்தபோது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் உலகிலேயே மிகப்பெரிய முத்து இது தான் என தெரியவந்தது.

இதன் இப்போதைய மதிப்பு 76 மில்லியன் பவுண்ட்(14,55,13,26,472 இலங்கை ரூபாய்) என தெரியவந்துள்ளது.

கடந்த 1934ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 6.4 கிலோ எடையுள்ள ‘அல்லா’ என்ற பெயருடைய முத்து தான் உலகின் பெரிய முத்து என பெயர் பெற்றுருந்தது.

ஆனால், தற்போது கண்டுபிடிக்கப்பட்டு முத்து அந்த பெயரை முறியடித்து தற்போது நியூயோர்க் நகரில் உள்ள கண்காட்சியில் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலில் மீனவனுக்கு கிடைத்த ரூ.1,455 கோடி மதிப்புள்ள முத்து Reviewed by NEWMANNAR on August 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.