திருக்கேதீஸ்வரம் பெளத்த விகாரை சட்ட விரோதமான நிர்மாணிப்பு. - வன்னி எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன்
மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு மிக அருகில் உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் சட்ட விரோதமாக பெளத்த விகாரை அமைக்கப்படுன்றதா? என்ற கேள்விக்கு பதிலளித்த நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரு வார கால அவகாசம் கோரினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேதீஸ்வரம் கோயில் இந்து மக்களின் புனித வழிபாட்டுத்தலம் என்பதனையும் திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு மிக அண்மையில் அமைந்துள்ள கணபதிப்பிள்ளை விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமாக பெளத்த விகாரை நிர்மாணிக்கப்படுவதையும் அறிவீர்களா? இதனைத் தடுக்க நடவடிக்கை எடுப்பீர்களா என்க் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளிக்கவே நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரு வார கால அவகாசம் கோரினார்.
திருக்கேதீஸ்வரம் பெளத்த விகாரை சட்ட விரோதமான நிர்மாணிப்பு. - வன்னி எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன்
Reviewed by NEWMANNAR
on
August 25, 2016
Rating:

No comments:
Post a Comment