உலகின் மிகப்பெரிய விமானம் ”எயார்லேண்டர் 10” விபத்திற்குள்ளானது
ஹைபிரிட் எயார் வெஹிக்கில்ஸ் (Hybrid Air Vehicles) எனும் நிறுவனம் 35.6 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கிய மிகப்பெரிய விமானமான எயார்லேண்டர் 10 ((Airlander 10) வெற்றிகரமாகத் தனது முதற்பயணத்தை நிறைவு செய்த பின்னர், இரண்டாவது சோதனை ஓட்டத்திற்கு தயாரானபோது திடீரென முன்பாகம் தரையில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
மொத்தம் நான்கு என்ஜின்கள் கொண்ட எயார்லேண்டர் விமானம், 302 அடி நீளமும் 143 அடி அகலமும் 845 அடி உயரமும் கொண்டது.
விமானம், ஹெலிகொப்டர் மற்றும் விண்கலம் என மூன்றின் செயற்பாடுகளையும் உள்ளடக்கியதாய் உருவாக்கப்பட்ட எயார்லேண்டர் 10, பெட்போர்ட்சையரில் உள்ள கேர்டிங்டான் விமானத்தளத்திலிருந்து முதற்பயணத்தைத் தொடங்கியது.
வெற்றிகரமாக வானில் பறந்த எயார்லேண்டர் 10, தனது முதற்பயணத்தை முடித்தது.
இந்நிலையில், இன்று இங்கிலாந்தில் இருந்து மீண்டும் இரண்டாவது சோதனை ஓட்டத்திற்காய் புறப்படத் தயாரானபோது, விமானத்தின் முன்பாகம் திடீரென தரையில் மோதி வீழ்ந்து விபத்திற்குள்ளானது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படுமென விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானம் ”எயார்லேண்டர் 10” விபத்திற்குள்ளானது
Reviewed by NEWMANNAR
on
August 25, 2016
Rating:

No comments:
Post a Comment