அண்மைய செய்திகள்

recent
-

இத்தாலி நிலநடுக்கத்தில் 247 பேர் பலி; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை


இத்தாலியின் மத்தியப் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

நில நடுக்கத்தின் காரணமாக 73 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருப்பதாகவும் முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்தாலியில் நிலநடுக்கத்திற்கு 247 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 300 இற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாலும், இடிபாடுகளுக்கிடையில் இன்னும் சிக்கி கிடக்கும் பலரில் சிலர் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதாலும் இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாலும் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய பீதியில் இருந்து இன்னும் விலகாத ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்தபடி, வீதிகளில் முகாம்கள் அமைத்து தங்கியுள்ளனர்.

இதேவேளை இத்தாலியின், ரோம் நகரில் ஏற்பட்ட நில அதிர்வினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என அந்த நாட்டிற்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

அங்குள்ள இலங்கையர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்தவிதமான சம்பவங்களும் பதிவாகவில்லை என இத்தாலிக்கான இலங்கைத் தூதரகத்தை மேற்கோள்காட்டி வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோமிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை அறிந்துகொள்வதற்காக இத்தாலிக்கான இலங்கைத் தூதரகம் விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

0039 345 603 5197 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு இலங்கையர்கள் ரோமிலுள்ள தங்களின் உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.
இத்தாலி நிலநடுக்கத்தில் 247 பேர் பலி; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை Reviewed by NEWMANNAR on August 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.