அண்மைய செய்திகள்

recent
-

விமான விபத்தில் சிக்கிய புலம் பெயர் தமிழர்கள்: பரபரப்பான நிமிடங்கள்....


எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று துபாயில் அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பயத்தில் அலறி துடித்தனர்.

இன்று மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ’போயிங்’ ரக விமானம் இன்று 282 பயணிகள் மற்றும் 18 விமான குழு என 300 பேருடன் துபாய்க்கு சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் விமானி துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அவசரமாக விமானத்தை தரையிறங்க அனுமதி கேட்டார்.

உடனடியாக விமானத்தை தரையிறக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் விமானம் தரையில் தரையிறங்கும் பொழுது, திடீரென விமானத்தின் பின்பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் கூக்குரல் இட்டு கதறத் தொடங்கினர்.

இந்த விமானம் கேரளாவில் இருந்து புறப்பட்டுச் சென்றமையினால் அதற்குள் புலம்பெயர் தமிழர்களும் இருந்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் அவர்கள் விமானம் விபத்துக்குள்ளானதை உணர்ந்த பயணிகள் பெரும் பதட்டத்துடன், அல்லோலகல்லோலப்பட்டனர். இந்நிலையில் இது தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை குறித்த விமானத்தில் பிரித்தானிய குடியுரிமை பெற்ற இருபத்து நான்கு பேர் பயணித்திருக்கின்றார்கள். அதுதவிர, 20 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இந்த விமானத்தில் பயணித்திருக்கின்றார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பெரும்பாலான பயணிகள் இந்தியாவினை சேர்ந்தவர்கள் என பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும், எந்தப் பயணிகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் மீட்கப்பட்டுள்ளனர்.

விமான விபத்தில் சிக்கிய புலம் பெயர் தமிழர்கள்: பரபரப்பான நிமிடங்கள்.... Reviewed by Author on August 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.