அண்மைய செய்திகள்

recent
-

நா-முத்துக்குமார்...........அழகான ஓவியமே....அழியாதா காவியமே.....


அழகான ஓவியமே....அழியாதா காவியமே.....

ஜூலை 12ல் உதித்த காவிய சூரியனே
கவிதையின் நாயகனே
சென்னை தந்தது உன்னை
இரங்கல் கவி பாட வைத்தாய் என்னை......

நானிலமும் சுற்றி
எட்டுத்திசையிலும் வெற்றி
ஏழிசையிலும் தமிழை ஏற்றி
எமதருமை கவிஞனே...
எம்மை விட்டாயே...ஏமாற்றி

எமனுக்கும் பிடிக்கும் உன்னை
என்று எழுதிவிட்டுப்போனாயோ-நீ
எழுதிய வைரவரிகளில் உன் முகம்-நான்
எழுத வரிகளில்லை கண்ணீரில் என் அகம்

நா....நா,,,நா!!! நா???
நா-முத்துக்குமார்-அண்ணா-நீ
நாற்பத்தியொன்றில் வித்தானாய்
நமது சொத்தானாய்-நீ

காலம் கடந்தவன் கவிஞன் படைப்பதில்
கடவுளுக்கு நிகரானவன்
காலனையும் வெல்வான் -அந்த
கடவுளும் கவலை கொள்வான் -உன்

இளம் கவிஞன் -வை-கஜேந்திரன் -
இதய அஞ்சலியுடன்
ஈழத்திலிருந்து.

(அன்னாரின் பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாருக்கு எமது நியூமன்னார் இணையகுழுமத்தினர் சார்பில்  ஆழ்ந்த இரங்கலையும் ஆத்மாசாந்திக்காவும் எல்லாம் வல்லவனை வேண்டி நிற்கிறோம்.)

நா-முத்துக்குமார்...........அழகான ஓவியமே....அழியாதா காவியமே..... Reviewed by Author on August 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.