வடக்கு முதல்வர் விக்கியிடம் ஆலோசனை கேட்கிறது ஐ.நா.!
அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஐக்கிய நாடுகள்எடுக்கவுள்ள நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின்ஆலோசனையும் கோரப்பட்டுள்ளது.
எனினும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின்கருத்தையும் அறிந்த பின்னரே தான் பதிலளிப்பார் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி வடக்குமுதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் ஆலோசனை கேட்டுள்ளார்.
கடிதத்துடன் மக்கோலி அம்மையார் அனுப்பிய ஆவணத்தை மேலோட்டமாகப் பார்த்ததில்அமைதி நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஐ.நா. என்ன நடவடிக்கைகள்மேற்கொள்ளவுள்ளது என்பதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு எமதுகருத்தை அறிய முற்படுகின்றார்.இதில் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஐ.நா.தீர்மானத்தைப் பற்றியும் எதுவும் சொல்லவில்லை.
இதனைப் பார்த்தால் இலங்கை அரசுசார்பாக நடவடிக்கை எடுப்பதுபோலத் தோன்றுகின்றது.இதற்குப் பதில் அனுப்பி வைப்பதற்கு முன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின்கருத்துகளை அறிய விரும்புகின்றேன் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன்கூறியுள்ளார்.
வடக்கு முதல்வர் விக்கியிடம் ஆலோசனை கேட்கிறது ஐ.நா.!
Reviewed by Author
on
August 12, 2016
Rating:

No comments:
Post a Comment