மன்னாரில் நாளை நீர் வெட்டு-- மன்னார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை
மன்னார் பிரதேசத்தில் பிரதான நீர் விநியோக குழாய்களில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகள் மேற்கொள்ளுவதன் காரணமாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் விநியோகம் நாளை தடைப்படும் என மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதனால் நாளை வெள்ளிக்கிழமை (26) காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நீர் துண்டிப்பு இடம் பெறும் என மன்னார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
மன்னார் நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன், நீர் தாங்கிகளில் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதன் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் நாளை நீர் வெட்டு-- மன்னார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை
Reviewed by NEWMANNAR
on
August 25, 2016
Rating:

No comments:
Post a Comment