வவுனியாவில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் பேருந்துக்கள்....
வவுனியா ஹொரவபொத்தான வீதி இலுப்பையடி பேருந்து தரிப்பிடமானது மிகவும் சன நெரிசல் கூடிய இடமாக காணப்படுகின்றது.
இவ் இடத்தில் வங்கிக் கிளைகளும் வவுனியா கிராமங்களுக்கான போக்குவரத்துகள் காணப்படுகின்றதுடன் இவ்வீதியே திருகோணமலை நகருக்கு பிரதான வீதியாகவும் விளங்குகின்றது.
இவ்விடத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துக்களும் தமது பலப் பரீட்சையை இவ்விடத்தில் காட்டுவதால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பாக அமைகின்றது.
அத்துடன் வீதிகடவைகளுக்கு அருகாமையிலும் பேருந்துக்களை தரித்து மக்களை ஏற்றி செல்கின்றமையயும் அவதானிக்க முடிகின்றது.
மேலும் இப்பிரதேசமானது வவுனியா நீதிமன்றிற்கு அருகாமையில் காணப்படுகின்றமையினால் வாகனங்கள் ஒலி சமிக்ஞை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சனநெரிசல் மிகுந்த பிரதேசத்தில் ஒலி எழுப்ப தடை விதிக்கப்படுகின்றமையடுத்து சாரதிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் பேருந்துக்கள்....
Reviewed by Author
on
September 07, 2016
Rating:

No comments:
Post a Comment