குப்பையால் சூழ்ந்திருக்கும் தியாகி திலீபனின் சமாதி!
தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.
யாழில் அமைந்திருக்கும் தமிழர்களின் தியாகி என போற்றப்படும் தியாகி திலீபனின் சமாதியை சுற்றி விளம்பர பதாதைகளை அமைத்தும் குப்பைகளை போட்டும் அதன் புனிதத்தை கெடுத்துள்ளனர்.
இதனை பார்க்கும் போது ஒவ்வொரு தமிழனுக்கும் மன வேதனை அளிக்கிறது. அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த ஒரு தியாகியின் சமாதியை பாதுகாத்து, சுத்தமாக வைத்திருப்பதும் ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.
குப்பையால் சூழ்ந்திருக்கும் தியாகி திலீபனின் சமாதி!
Reviewed by Author
on
September 07, 2016
Rating:

No comments:
Post a Comment